Published : 12 Feb 2017 08:48 AM
Last Updated : 12 Feb 2017 08:48 AM

ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பயணம் திரைப்படமாகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப் பயண நிகழ்ச்சியின் தொகுப்பு, உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்த இசைத் திரைப்படத்துக்கு ‘ஒன் ஹார்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையிலான இசை சுற்றுப்பயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் இந்த இசைத் திரைப்படம் கடந்த 5-ம் தேதி பிரத்யேகமாக திரை யிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் 25-ம் ஆண்டில் அடி யெடுத்து வைப்பதன் நினைவாக உருவாகியுள்ள இந்த இசைத் திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x