Published : 07 Jul 2016 10:59 AM
Last Updated : 07 Jul 2016 10:59 AM
ஹீரோவா நான் நடிக்க ஆரம் பிச்சதும் என்னோட ரெகுலர்ல இருந்து மாறியது வேலை மட்டும் தான். மற்றபடி நான் மாஸ்டரா இருந் தப்போ எப்படியோ அப்படியேதான் இருந்தேன். ‘இந்து’ படம் முடிச்சதும் குஞ்சுமோன் சார் தயாரிப்புல, ஷங்கர் சாரோட ‘காதலன்’ படத்துல நடிக்க ஒப்பந்தமானேன். ஷங்கர் சாருக்கு அது ரெண்டாவது படம். எனக்கும்தான். ‘இந்து’ படத்தோட பல காட்சிகள் சென்னையிலதான் படமாச்சு. ஆனா, ‘காதலன்’படத்தை சென்னை, கும்ப கோணம், சிதம்பரம், பொள்ளாச்சி, டெல்லி, குலுமணாலின்னு நிறைய இடங்கள்ல ஷூட் பண்ணினாங்க.
மாஸ்டரா வேலை பார்க்கும் போது நாலு, அஞ்சு நாட்களுக்கு மேல நான் எங்கேயும் தங்க மாட்டேன். ஃபாரின் டிரிப்ல ரெண்டு, மூணு பாட்டுங்க, பத்து நாட்களுக்கு மேல ஷூட்டிங் போகும். என்னால அவ்வளவு நாட்கள் வீட்டை, அம்மாவைப் பிரிந்து இருக்க முடியாது. வீட்டு நினைப்பு வந் துடும். அதனாலேயே நிறைய பாடல் களைத் தவிர்த்திருக்கேன். அப்புறம் பழகிட்டேன். ஆனா, இப்போ கூட என்னால் முடியலை. நாலு, அஞ்சு நாளைக்கு ஒருதடவை அம்மாவைப் பார்க்கணும். ஹோம்சிக் வந்துடுது.
‘காதலன்’ல இருந்து என் வாழ்க் கையே மாறிடுச்சு. வீட்டைப் பிரிந்து நிறைய நாட்கள் இருக்கவேண்டிய சூழல் வந்துச்சு. ஷங்கர் சார் 100 சதவீதம் செஞ்சு முடிக்கணும்னு நினைக்கிற வேலையை என்னால முழுமையா செய்ய முடியலை. ஏ.ஆர்.ரஹ்மான், தோட்டாதரணி, ஜீவா, எஸ்.பி.பி, ரகுவரன், நக்மான்னு மிகப் பெரிய ஆளுங்க வேலை பார்த் தாங்க.
அடிப்படை யில நான் ஒரு பரதநாட்டிய டான்ஸர். ‘காதலன்’ல மட்டும்தான் எனக்கு பரதநாட்டியம் ஆட வாய்ப்பு கிடைச் சது. அதே மாதிரி ‘காதலன்’ படத் துலதான் முதன் முதலா வடி வேலு சார் பழக்க மானார். முதல் முறையா ஒண்ணா நடிச்சோம். ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாட்டுக்கு ரோட்டுல ஆடிக் கிட்டிருக்கிறோம். என்னோட மூவ் மென்ட்ஸுக்கு நடுவுல வடிவேலு சார் டக்குன்னு காமெடியா ஒரு ஸ்டெப் ஆடினார்.
பாட்டோட ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, ‘‘பிரபு... ஊர்வசி பாட்டுல நீ ஆடிட் டிருக்கும்போது, என்னை நடுவுல விட்ட பாரு. அங்கதான் பிரபு நீ நிக் குறே!’’ன்னார். ஏன்னு கேட் டேன். ‘‘யாருமே கஷ்டப் பட்டு ஆடிட்டிருக்கும் போது நடுவுல யாரையும் விட மாட்டாங்க. ஆனா, நீ அப்படியில்லை’’ன் னார். இப்போ தும் நேர்ல பார்க் கும் போது அதை சொல் லிட்டே இருப் பார்.
ஒரு முறை வடிவேலு சார் வட இந்தியா பக்கம் போயிருக்கார். அவரை அங்கே ஏர்போர்ட் செக் யூரிடியில புடிச்சிட்டாங்க. அவர் பயந்துட்டார். ‘காத லன்’ படம் ஹிந்தியில டப் பிங் செய்யப்பட்டு நல்லாப் போச்சு. அதில் அவர் ஆடிய காமெடி ஸ்டெப்ஸை அவங்க முன்னாடி ஆடிக் காட்டிய பிறகுதான் அவரை விட்டிருக்காங்க. அந்த அளவுக்கு படமும், பாட்டும் இந்தியா முழுக்க ரீச் ஆச்சு. அடுத்தடுத்து நாங்க ரெண்டு பேரும் நிறைய படங்கள்ல நடிச்சோம். பிறகு நான் டைரக்ஷன் பண்ணும்போதும் ஒண்ணா வேலை செஞ்சோம்.
அதே ‘ஊர்வசி ஊர்வசி’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டிருக் கும்போது நம்ம அண்ணா சாலையில உயரத்துல ஒரு போர்டு இருந்துச்சு. எப்படியும் அது 50 அடி இருக்கும். ‘‘அது மேல ஏறி உட்கார முடியுமா?’’ன்னு டைரக்டர் கேட்டார். யோசிக்காம ஏறி உட்கார்ந்துட்டேன். அங்கே இருந்த போலீஸ்காரர் இதை கவனிச்சிருக்கார். ஒண்ணும் சொல்லாம எங்க யூனிட் மேனேஜரை ஸ்டேஷனுக்கு அழைச்சுட் டுப் போய்ட்டார். சாயங்காலம் ஷூட்டிங் முடிஞ்சதும்தான் திரும்ப வந்தார். ‘‘என்ன சார் ஆச்சு?’’ன்னு கேட்டா, ‘‘இவ்வளவு உயரத்துல ஏறிட்டீங்க. ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்றதுன்னு என்னை அழைச் சுட்டு போய்ட்டார்’’ன்னார். இந்த ஜாலியான பாட்டுக்குப் பின்னாடி எங்களோட கஷ்டமும் இருந்துச்சு.
படத்தோட ஷூட்டிங் நடந்தப்ப எனக்கு சரியா பைக் ஓட்டத் தெரியாது. ஏன் ஸ்டார்ட் பண்ணக்கூட தெரியாது. ஆனா, படத்துல நான், வடிவேலு, நக்மா மூணு பேரும் டிரிபிள்ஸ் போவோம். இதுல பஸ்ஸுக்கு மேல வேற ஓட்டணும். ‘கரணம் தப்பினால் மரணம்’னு இருந்துச்சு. நான் மட்டும்னு இல்லைங்க, நிறையப் பேர் இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தாண்டி வந்திருக்காங்க. எல்லாம் உங்க சந்தோஷத்துக்காகத்தான். கைதட்டல், விசிலுக்காகவும்தான்.
டெல்லியில ஒரு சண்டைக் காட்சி. பாலத்தை உடைச்சி கிழே சண்டை போடுற மாதிரி காட்சி. அதுக்கு மாஸ்டர் விக்ரம் தர்மா. பதினஞ்சுல இருந்து இருபது அடி உயரம் கீழே விழுந்தப்போவே இடதுபக்க கால் சிலீப் ஆகி ஆங்கிள்ல உள்ள தசை நார் கிழிஞ்சிடுச்சு. காலை அசைக்கவே முடியலை. ஒரு சின்ன மூவ்மென்ட்க்குகூட பயங்கர வலி. கட்டுப்போட்டுட்டுத்தான் ஃபைட் பண்ணேன்.
அது முடிஞ்சதும் குலுமணாலியில ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு ஷூட்டிங்கு புறப்படுறோம். கால் வலி அதிகமாயிடுச்சு. ஆனா, பாட்டை எடுத்தாகணும். இப்போ பார்த்தீங்கன்னாகூட அந்தப் பாட்டுல நான் பெருசா நடந்திருக்கவே மாட்டேன். ஒரே ஒரு இடத்துல மட்டும்தான் சின்னதா ஒரு வாக் போயிருப்பேன்.
அடுத்து ‘முக்காலா முக்காபுல்லா’ பாட்டோட படப்பிடிப்பு. ‘‘இடது பக்க காலுக்கு சுத்தமா வெயிட் கொடுக்கக் கூடாது’’ன்னு டாக்டர் சொல்லிட்டார். அப்படியே கொடுத்தாலும் எனக்கு ரொம்ப வலிச்சுது. என்னடா இது இவ்வளவு நல்ல பாட்டு. இந்த நேரத்துல இப்படி கால் அடிபட்டுச்சேன்னு எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. அந்தப் பாட்டு முழுக்க வலதுபக்க கால்ல வெயிட் கொடுத்துதான் ஆடியிருப்பேன். வலி பின்னி எடுத்துச்சு. அந்த நேரத்துல ஸ்டிக் வெச்சிட்டுத்தான் நடந்தேன். அந்தப் பாட்டு உலகம் முழுக்க ஹிட் ஆயிடுச்சு.
இப்போ கூட ஒரு தொப்பி, பேண்ட், ஷர்ட்டோட ஒரு கார்ட்டூன் மாதிரி வரைஞ்சா போதும். அது ‘முக்காலா’ பிராண்ட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். இப்படி ரீச் ஆகியிருக்கிற அந்தப் பாட்டுல என்னோட கை, கால்களைத் துப்பாக்கியால சுடுவாங்க. அதுக்கு பிறகும் நான் ஆடுற மாதிரி ஒரு மூவ்மெண்ட் வரும். அது ஷங்கர் சாரோட ஐடியாதான். அந்தக் கடைசி பிட் பண்ணும்போது கால் வலியோட இன்னொரு சவாலும் எனக்கு இருந்துச்சு. அது என்ன சவால்ங்கிறதை அடுத்த வாரம் ஷேர் பண்றேன்.
- இன்னும் சொல்வேன்
படம், உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT