Published : 25 Feb 2017 02:44 PM
Last Updated : 25 Feb 2017 02:44 PM
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'கவண்', மார்ச் 31ல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் 'கவண்' படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது.
அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா இசையமைத்து வருகிறார். முழுபடப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகளை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.
மேலும், இசை வெளியீடு முடிந்துள்ள நிலையில் படம் எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இது குறித்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா "இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தணிக்கை பணிகள் முடிந்து மார்ச் 31-ம் தேதி வெளியாகும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'கவண்' தலைப்புக்கான காரணம் குறித்து படக்குழு "‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது.
இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி,கல்லெறி கருவி என்று இலக்கியத்திலும், உண்டிவில் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்" என்று தெரிவித்திருக்கிறது.
'கவண்' படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT