Published : 28 Oct 2014 07:15 PM
Last Updated : 28 Oct 2014 07:15 PM
கத்தி திரைப்பட நாயகன் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகளின் போது 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய வசனம் இடம்பெற்றிருந்தது. 2ஜி வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது ஊழல் நடந்ததாக வசனம் இடம்பெற்றது பற்றி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து ராமசுப்பிரமணியன் என்பவர் இன்று சென்னை நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில், “2ஜி அலைக்கற்றை வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது அதில் ஈடுபட்ட அனைவரும் ஊழல் செய்தவர்களே என்று எப்படி அந்தத் திரைப்படம் கருத்து கூற முடியும்?
அந்தக் குறிப்பிட்ட வசனம் அனைவரையும் மோசமாக சித்தரித்துள்ளது. அவர்களது மரியாதைக்குக் களங்கம் விளைவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பதிவு செய்த அனுமதித்த நீதிமன்றம், இதன் மீதான விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT