Published : 14 Jun 2019 11:44 AM
Last Updated : 14 Jun 2019 11:44 AM
விளையாட்டை மையப்படுத்தி ஆதி நடிக்கும் படத்துக்கு 'கிளாப் - தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிக்கும் படத்துக்கு 'கிளாப் - தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்' என்று பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு ஜூலை 12-ம் தேதி படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ், அகான்ஷா சிங், கிரிஷா குரூப், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். மேலும், தமிழ் படப்பிடிப்பை தெலுங்கு நடிகர் நானியும், தெலுங்கு படப்பிடிப்பை இளையராஜாவும் துவக்கி வைத்தார்கள்.
இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பிரித்வி ஆதித்யா, “விளையாட்டை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன. சமகாலத்திய இயக்குநர்கள் இந்த வகையிலான படங்களில் உள்ள ஒரே மாதிரியான கூறுகளை உடைத்து, புதிய மற்றும் வேறுபட்ட பரிமாணங்களை கொண்ட படங்களை கொடுப்பதை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த வகையில், 'கிளாப்' சில விதிவிலக்கான விஷயங்களை கொண்டுள்ளது.
ஆதி சார் ஒரு தடகள வீரனாக நடிக்கிறார். இதற்காக நிறைய மெனக்கெட்டு கூடுதல் முயற்சிகள் எடுக்கிறார். மல்லீ ராவா நாயகியாகவும், கிரிஷா குரூப் ஒரு தடகள வீராங்கணையாக நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்துக்காக தன் சொந்த விருப்பத்தில் தயாராக, 2-3 மாத காலம் பயிற்சி பெற்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக பிரவீன் குமார், கலை இயக்குநராக வைரபாலன், எடிட்டராக ராகுல் ஆகியோர் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடித்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT