Published : 18 Jun 2019 11:37 AM
Last Updated : 18 Jun 2019 11:37 AM
அரவிந்த் சுவாமி - சன்தோஷ் பி.ஜெயக்குமார் இணையும் படத்துக்கு 'புலனாய்வு' என்று பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். இதில் 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களுக்கு கடுமையான எதிர்ப்பு வந்தாலும், வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
அவ்விரண்டு படங்களில் இணைந்து பணிபுரிந்த சந்தோஷ் பி.ஜெயக்குமார் - கவுதம் கார்த்திக் இருவரும் மீண்டும் இணைய 'தீமைதான் வெல்லும்' படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணத்தால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து சன்தோஷ் பி.ஜெயக்குமார், மதியழகன் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதில் அரவிந்த் சுவாமி நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இன்று (ஜூன் 18) அரவிந்த் சுவாமி பிறந்த நாளை முன்னிட்டு, சன்தோஷ் பி.ஜெயக்குமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 'புலனாய்வு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். நாயகி இல்லாமல் முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT