Last Updated : 24 Jun, 2019 12:10 PM

 

Published : 24 Jun 2019 12:10 PM
Last Updated : 24 Jun 2019 12:10 PM

நான் ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன்: ‘பிக் பாஸ்’ கமல்

பாரதி ‘ரெளத்திரம் பழகு’ என்று சொன்னதால், நான் பழகிக் கொண்டிருக்கிறேன் என ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் நேற்று (ஜூன் 23) முதல் 'பிக் பாஸ்' சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. பாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜயகுமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகின் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக 'பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

கடந்த இரண்டு சீசனைப் போல இம்முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். நேற்றைய (ஜூன் 23) நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரையும் அறிமுகப்படுத்தி  வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். அப்போது 2-வது போட்டியாளராக வீட்டுக்குள் சென்றார் லாஸ்லியா. இவர் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர்.

'தெனாலி' படத்தின் வசனத்தைப் பேசிக் காட்ட முடியுமா என்று கமலிடம் லாஸ்லியா கோரிக்கை வைத்தார். அந்தப் படத்தின் வசனம் ஏன் என்று இலங்கை தமிழில் கமல் பேசிக் காட்டினார்.

கமல் பேசுகையில், “எனக்கு எதைப் பார்த்தாலும் கோபம். நல்ல சினிமாவைப் பார்த்தால் கோபம் வரும் எனக்கு. எங்களது சினிமா ஏன் இப்படியில்லை என்ற கோபம். கெட்ட சினிமாவைப் பார்த்தாலும் கோபம் வரும் எனக்கு. இதெல்லாம் சினிமா என்று சொல்லி எடுக்கிறார்களே என்று.

நல்ல நாட்டைப் பார்த்தாலும் கோபம் வரும் எனக்கு. எங்கட நாடு இப்படியில்லையே என்ற கோபம். எங்கட நாட்டைப் பார்த்தாலும் கோபம் எனக்கு. எப்படியிருந்த நாட்டை இப்படி நாசமாக்கிட்டாங்களே என்ற கோபம். குண்டும், குழியுமாய் ரோட்டை போட்டு வைத்திருப்பதைப் பார்த்தாலே கோபம் எனக்கு. அந்த ரோட்டை குப்பை மேடாக மாற்றின எங்கள் மீதும் கோபம் எனக்கு. ஷவரில் குளிப்பவனைப் பார்த்தாலும் கோபம் எனக்கு. சாக்கடையை ஆற்றில் கொண்டு போய் கலப்பவனைப் பார்த்தாலும் கோபம் எனக்கு. இப்படியெல்லாம் கோபப்பட்டு என்ன பிரயோஜனம் என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு ஆள் கோபபப்பட்டால் ஊரே அழிந்து போகும். கண்ணகி கதை கேட்டிருப்பீர்கள் தானே. அதைப் போல ஒரு ஊரே கோபப்பட்டால், யோசித்துப் பாருங்கோ. எந்த நாட்டிலும் ஒரு மாற்றம் வேண்டுமென்றால், அதற்கு மய்யப்புள்ளி கோபம் தான். அதனால் தான் பாரதி 'ரெளத்திரம் பழகு' என்று சொன்னார். அதனால் தான் கமல்ஹாசன் ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் பழகுங்கோ” என்று பேசினார் கமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x