Published : 07 Mar 2018 04:34 PM
Last Updated : 07 Mar 2018 04:34 PM
நகரத்து அழகிகளை கிராமத்துக்கு அழைத்துச் செல்லும் 'வில்லா டு வில்லேஜ்' என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
நகரத்தில் வாழ்பவர்களை கிராமத்துக்கு அழைத்துச்சென்று சில நாட்கள் வாழச் சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் 'வில்லா டு வில்லேஜ்' நிகழ்ச்சி.
நகரத்தைச் சேர்ந்த 12 இளம்பெண்கள் கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். எந்தவிதமான நவீன வசதிகளும் இல்லாமல் கிராமத்தில் அவர்கள் எப்படி வாழப் போகிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சி. கிராமத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படும் தினசரி பணிகள் மற்றும் சவால்களைப் போட்டியாளர்கள் செய்து முடிக்க வேண்டும்.
அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள்தான் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள். நகரத்தில் உள்ளவர்களால் கிராமத்தில் எந்தளவுக்கு வாழமுடியும் என்ற சவால்தான் இந்தப் போட்டியே. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், கிராமத்து வாழ்க்கையின் மகத்துவத்தை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு 'அழகி' பட்டம் சூட்டப்படும். இந்த நிகழ்ச்சியை, 'ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்குகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
போட்டியாளர்களாக இடம்பெறும் 12 அழகிகள் யார் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கின்றனர். வரும் 10ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT