Published : 10 Mar 2018 02:50 PM
Last Updated : 10 Mar 2018 02:50 PM
சினிமா சங்கங்களின் ஸ்டிக்கை விமர்சித்து இயக்குநர் அறிவழகன் ட்வீட் செய்துள்ளார்.
க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். அத்துடன், இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு போன்றவற்றையும் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, வரும் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இன்னொரு பக்கம், தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 16ஆம் தேதி முதல் திரையரங்குகளை மூட இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த சங்கங்களின் ஸ்டிரைக்கை விமர்சித்து இயக்குநர் அறிவழகன் ட்வீட் செய்துள்ளார். “மார்ச் மாதம் என்பது ஸ்டிரைக் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் பாதுகாப்பான, ஈஸியான மாதமாகி விட்டது. எப்படியும் அடுத்த மாதம் ஏதாவதொரு பெரிய படம் ரிலீஸாகும் முன்பு இந்தப் பிரச்னையெல்லாம் தீர்ந்துவிடும். இதில் பாதிக்கப்படுவது சிறிய படங்கள்தான். அவற்றை ரிலீஸ் செய்வது கஷ்டமான விஷயமாக இருக்கும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அறிவழகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT