Published : 22 Mar 2018 12:31 PM
Last Updated : 22 Mar 2018 12:31 PM
வேலை நிறுத்தம் தொடர்பாக ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம் என விஷால் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் நடந்துவரும் வேலை நிறுத்தம் குறித்து, இயக்குநர்கள் சங்கத்துடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் விஷால், சிம்பு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, மனோபாலா, இயக்குநர்கள் விக்ரமன், தங்கர்பச்சான், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “சினிமாத்துறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். மறுபடி சினிமாத்துறை செயல்பட ஆரம்பிக்கும்போது எந்தவிதமான பிரச்சினையும் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
‘சினிமாவில் வேலை நிறுத்தம் எப்போதுமே இருக்கக் கூடாது’ என்ற ரஜினியின் கருத்துக்குப் பதிலளித்த விஷால், “ரஜியைச் சந்தித்து இதற்கு ஆதரவு கேட்போம்” என்றார்.
‘க்யூப் பிரச்னையில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். ‘காலா’ உள்ளிட்ட புதிய படங்கள் வெளியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT