Last Updated : 22 Mar, 2018 12:31 PM

 

Published : 22 Mar 2018 12:31 PM
Last Updated : 22 Mar 2018 12:31 PM

‘மை டியர் குட்டிச்சாத்தான்’ திரைப்பட எடிட்டர் சேகர் காலமானார்

தென்னிந்திய மொழிகளில் 200 படங்களுக்கும் மேல் எடிட்டராகப் பணிபுரிந்த சேகர் காலமானார்.

‘வருஷம் 16’ படத்துக்காக தமிழக அரசு விருதையும், ‘1 முதல் 0 வரை’ படத்துக்காக கேரள அரசு விருதையும் பெற்றவர் எடிட்டர் சேகர்(வயது 81) . பாசில், சித்திக் போன்ற இயக்குநர்களின் ஆஸ்தான எடிட்டர் இவர்தான். தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘தச்சோலி அம்பு’, முதல் 70 எம்.எம். படமான ‘தடையோட்டம்’, இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ ஆகிய படங்களின் எடிட்டர் இவர்தான்.

200 படங்களுக்கு மேல் எடிட்டராகப் பணியாற்றிய சேகர், அதன்பிறகு தன்னுடைய சொந்த ஊரான திருச்சி அருகேயுள்ள தென்னூரில் செட்டிலாகிவிட்டார். மாரடைப்பு ஏற்பட்ட இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு உயிர் பிறந்தது.

சேகரின் மனைவி பெயர் சுந்தரி. இவர்களுக்கு தீபலட்சுமி, திலகவதி, நித்யா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூவருக்குமே திருமணமாகி விட்டது. இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு சொந்த ஊரில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x