Published : 13 Mar 2018 11:37 AM
Last Updated : 13 Mar 2018 11:37 AM
ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது
க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த 1-ம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
இதனால், கடந்த இரண்டு வாரங்களாக புதுப்படம் எதுவும் ரிலீஸாகாததால், ‘பாகுபலி’, ‘மேயாத மான்’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘விக்ரம் வேதா’ என ஏற்கெனவே ரிலீஸான படங்களையே மறுபடி ரிலீஸ் செய்துள்ளனர்.
அடுத்ததாக, வருகிற 16-ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அத்துடன், இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஏற்கெனவே அறிவித்தபடி புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தம் தொடரும் என்றும், திட்டமிட்டபடி 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT