Published : 12 Mar 2018 07:26 PM
Last Updated : 12 Mar 2018 07:26 PM
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஜபருன்னிசா, சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக கால் பதித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். ‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் இருவரும் இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஜபருன்னிசா இந்தப் படத்தின் மூலம் காஸ்ட்யூம் டிசைனராக சினிமாவில் கால் பதிக்கிறார். டிசைனிங்கில் ஆர்வம் உள்ள அவர், புது அனுபவத்துக்காக சினிமாவில் டிசைனராகப் பணியாற்றுகிறார்.
ரைஸாவுக்கான உடைகளை டிசைன் செய்துள்ள ஜபருன்னிசா, படம் மட்டுமின்றி விழாக்களுக்கு அணிந்து செல்லவும் ரைஸாவுக்காக உடைகளை டிசைன் செய்து கொடுத்துள்ளாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT