Published : 10 Mar 2018 11:42 AM
Last Updated : 10 Mar 2018 11:42 AM
ரஜினி படங்களின் நஷ்டம் தொடர்பாக ட்வீட் செய்த சர்ச்சையில், போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்.
ரஜினி கடைசியாக நடித்து வெளியான ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ மற்றும் ‘கபாலி’ ஆகிய மூன்று படங்களுமே நஷ்டத்தைச் சந்தித்துள்ளன என்று விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது. ‘கோச்சடையான்’ படம் 26 கோடி 50 லட்ச ரூபாய் நஷ்டம் என்றும், ‘லிங்கா’ 26 கோடி ரூபாய் நஷ்டம் என்றும், ‘கபாலி’ 20 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்க திருப்பூர் சுப்ரமணியத்தைத் தொடர்பு கொண்டோம். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், “இப்படியொரு புள்ளிவிவரத்தை நான் ட்விட்டரில் பதிவிடவே இல்லை. ஆனால், நான் பதிவிட்டது போல யாரோ போலியாகத் தயார் செய்து பரப்பி வருகின்றனர். இப்படி என்மீது களங்கள் சுமத்துகிறவர்கள் மீது வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT