Last Updated : 10 Mar, 2018 03:52 PM

 

Published : 10 Mar 2018 03:52 PM
Last Updated : 10 Mar 2018 03:52 PM

“நீ கிடைக்கப் பெற்றதில் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்… லவ் யூ” – கணவனிடம் நெகிழ்ந்த அஞ்சனா

“நீ கிடைக்கப் பெற்றதில் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்… லவ் யூ” என நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜே அஞ்சனா.

சன் மியூஸிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவருக்கும், நடிகர் சந்திரனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இன்று அவர்களுக்கு இரண்டாவது வருட திருமண நாள். இதையொட்டி, ட்விட்டரில் சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அஞ்சனா.

“சிரிப்பு, சந்தோஷம், சண்டை மற்றும் நிறைய காதல் என இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இதுபோல் இன்னும் நிறைய வருடங்கள் வரவேண்டும். மிக அழகான நீண்ட வாழ்க்கை நமக்கு இருக்கிறது எனத் தெரியும். நீ கிடைக்கப் பெற்றதில் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். லவ் யூ” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அஞ்சனா.

சந்திரன், ‘கயல்’ மற்றும் ‘ரூபாய்’ படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் ‘கிரகணம்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ மற்றும் ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x