Published : 28 May 2019 08:12 PM
Last Updated : 28 May 2019 08:12 PM
'கரகாட்டக்காரன் 2' பண்ணுவதற்கான பணிகள் தொடங்கி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குநர் கங்கை அமரன் தெரிவித்தார்.
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கரகாட்டக்காரன்'. 1989-ம் ஆண்டு வெளியான இப்படம் அப்போதைய காலகட்டத்தில் வசூல் சாதனை செய்தது.
இப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமனி - செந்தில் - கோவை சரளா ஆகிய மூவரின் காமெடி இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் இப்படத்தில் இடம்பெற்ற காமெடிகள் இப்போதும் நகைச்சுவை சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தற்போது 'கரகாட்டக்காரன்' 2-ம் பாகம் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ’கரகாட்டக்காரன்’ இயக்குநர் கங்கை அமரனிடம் கேட்ட போது, "உண்மைத் தான். இப்போது தான் ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். ராமராஜன் உள்ளிட்ட அனைவரிடமும் பேசிட்டு இருக்கோம்.
'கரகாட்டக்காரன்' படத்தில் நடித்தவர்களுக்கு குழந்தை பிறந்து, இப்போது இரண்டு தலைமுறைகளும் சந்தித்தால் எப்படியிருக்கும் என்பது மாதிரி ப்ளான் பண்றோம். இப்போது உள்ள நடிகர்களும் நடிப்பார்கள். 'கரகாட்டக்காரன்' படத்தில் நடித்தவர்கள் அனைவரிடமும் பேசிட்டு இருக்கோம். அனைத்துமே நல்லவிதமாக போய்க் கொண்டிருக்கிறது. இப்போது உள்ள நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இப்படத்தில் நடிப்பவர்கள், இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT