Published : 29 May 2019 06:20 PM
Last Updated : 29 May 2019 06:20 PM
தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேர் ஆஃப் கஞ்செரபாலம்' திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
2018-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் 'கேர் ஆஃப் கஞ்செரபாலம்'. ராணா வழங்க, வெங்கடேஷ் மகா எழுதி, இயக்கினார். 4 தனித்தனிக் கதைகள் ஒன்றிணைவது தான் திரைக்கதை. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றது. தற்போது இதன் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ராஜசேகர் ரெட்டி என்பவர் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.
தமிழ் ரீமேக்கிற்கான முதற்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டன என்றும், விரைவில் நடிகர்கள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், தற்போது தான் மலையாள ரீமேக்கிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT