Published : 12 May 2019 01:43 PM
Last Updated : 12 May 2019 01:43 PM
'துப்பறிவாளன் 2' படத்தை வெளிநாடுகளில் படமாக்க இயக்குநர் மிஷ்கின் திட்டமிட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'துப்பறிவாளன்'. விஷால் தயாரிப்பில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து இப்படத்தின் 2-வது படாகம் உருவாகும் என்று விஷால் பல பேட்டிகளில் தெரிவித்து வந்தார். ஆனால், எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளனர்
இக்கதையை முழுக்க வெளிநாட்டுகளில் நடப்பது போல் அமைத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இதற்காக அசெர்பைஜான் நாட்டில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்துவிட்டார். அடுத்ததாக லண்டனிலும் சில இடங்களை தேர்வு செய்யவுள்ளார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'சைக்கோ' படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, முழுமையாக 'துப்பறிவாளன் 2' படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் மிஷ்கின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT