Published : 05 May 2019 04:33 PM
Last Updated : 05 May 2019 04:33 PM
தான் இப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிக்க நினைத்தால் தன்னை யாரும் நம்பப் போவதில்லை என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து படம் மே 31-ம் தேதி வெளியாக உள்ளது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகர்களுடன் நடித்து வந்தாலும், சாய் பல்லவியின் முதல் காதல் அவர் படித்திருக்கும் மருத்துவப் படிப்பு தான். அப்படிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக திரைத்துறையில் பிரபலமாகிவிட்டார்.
மருத்துவம் படித்திருப்பது தொடர்பாக சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், ''நான் ப்ராக்டிஸ் செய்ய மருத்துவமனைக்குச் செல்வதில்லை. ஆனால் கண்டிப்பாக படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனக்கு இருந்த சில திறமைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு போய்க் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாம் நன்றாகச் செய்த ஒரு விஷயம் இப்போது நமக்குச் சுத்தமாக வராத போது இதயம் நொறுங்குவதைப் போல இருக்கிறது.
இப்போது நான் ஒரு மருத்துவமனைக்குச் சென்றாலும் கண்டிப்பாக யாரும் என்னை நம்பப் போவதில்லை. வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்களே தவிர, நான் தரும் மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருக்கும் ஒரே டாக்டர் நான் தான்" என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT