Published : 26 Apr 2019 08:02 PM
Last Updated : 26 Apr 2019 08:02 PM
ஸ்ருதிஹாசன் மற்றும் மைக்கேல் கார்சலே இருவரின் பதிவை வைத்துப் பார்த்தால், இருவரும் பிரிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஸ்ருதிஹாசன். அவரும் பிரிட்டிஷ் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வந்தார்கள். இதனை வெளிப்படையாக அறிவிக்கவிட்டாலும், தொடர்ச்சியாக இருவரும் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
தமிழ் திரையுலகில் நீண்ட நாட்கள் கழித்து, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். திடீரென்று ஏப்ரல் 10-ம் தேதி ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வாழ்க்கையின் இன்னொரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறேன். அனைத்து காதல் பாடங்களுக்காகவும் நன்றி.
இருண்ட இடங்களின் அடியாழத்தில் தான் ஒளிபிரகாசிக்கும். மேலும் இசை, மேலும் படங்கள் என எதிர்நோக்கியுள்ளேன். என்னுடனே நான் இருப்பது எப்போதுமே என்னுடைய பெரிய காதல் கதையாக இருந்துள்ளது” என்று தெரிவித்தார். இதனை வைத்து பலரும் அவர் காதலனைப் பிரிந்துவிட்டார் என்று தகவல்கள் பரப்பினார்கள்.
தற்போது ஸ்ருதிஹாசனின் காதலராக வலம் வந்த மைக்கேல் கார்சலே தனது ட்விட்டர் பதிவில், “வாழ்க்கை நம் இருவரையும் உலகின் எதிர் துருவங்களில் வைத்துள்ளது. ஆகையால், நாம் இருவருமே துரதிருஷ்டவசமாக தனித்தனி பாதையில் செல்ல வேண்டியுள்ளது.
ஆனாலும், அவர் என்னுடைய சிறந்த தோழி தான். அவரை என் தோழியாக அடைந்ததிற்கு மிக்க நன்றி. லவ் யூ!” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டதாக தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT