Last Updated : 24 Apr, 2019 02:22 PM

 

Published : 24 Apr 2019 02:22 PM
Last Updated : 24 Apr 2019 02:22 PM

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்து: நேரில் நலம் விசாரித்த விஜய்

'தளபதி 63' படப்பிடிப்பில் லைட் ஒன்று தலையில் விழுந்து எலக்ட்ரீஷியனுக்கு பலத்த அடிப்பட்டது. அவரை மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்துள்ளார் விஜய்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. சென்னையில் அரங்குகள் அமைத்து, இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி வந்தது படக்குழு.

நேற்றிரவு (ஏப்ரல் 23) படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எலக்ட்ரீஷியன் செல்வராஜ் பிரம்மாண்ட லைட் ஒன்றுக்கு கீழே நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த லைட் அவருடைய தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, படப்பிடிப்பையும் நிறுத்தினார்கள்.

இன்று (ஏப்ரல் 24) காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் விஜய். அப்போது, அவருக்குப் பண உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது குறித்து உறுதியான தகவலை விஜய் தரப்பு தெரிவிக்கவில்லை. இன்று படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இப்படத்தில் பெண்கள் ஃபுட்பால் அணிக்கு பயிற்சியாளராக நடித்து வருகிறார் விஜய். நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x