Last Updated : 09 Apr, 2019 03:51 PM

 

Published : 09 Apr 2019 03:51 PM
Last Updated : 09 Apr 2019 03:51 PM

விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜி; புறந்தள்ள முடியாத சினிமா சூப்பர் டீலக்ஸ்: இயக்குநர் சேரன் புகழாரம்

விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜி, புறந்தள்ள முடியாத சினிமா  'சூப்பர் டீலக்ஸ்' என்று இயக்குநர் சேரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. 'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி விமர்சகர்கள் பலரும் இப்படத்தைக் கொண்டாடினார்கள். ஆனால் வசூல் ரீதியாக சென்னையைத் தவிர்த்து இப்படம் சோபிக்கவில்லை. மேலும் இப்படம் தொடர்பாக சில சர்ச்சைகளும் உலவி வருகிறது.

இந்நிலையில் 'சூப்பர் டீலக்ஸ்' பார்த்துவிட்டு இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

வாழ்க்கை பற்றி சாமி பற்றி, எது நல்லது எது கெட்டது, யார் நல்லவர் யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதைதான் படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம்முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச்சுற்றி ஓடவில்லை நம்முள்தான் ஓடுகிறது.

முதலில் திருநங்கையாக நடிக்க சம்மதித்தது. அதிலும் திருநங்கைகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னைப் பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன். சல்யூட் விஜய் சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி.

ஆபாச வார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமா தான் 'சூப்பர் டீலக்ஸ்'.காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும்  என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது. அடுத்த 5வருடங்களில் இதுபோல சினிமாக்கள் அதிகம் வரும்

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x