Published : 18 Apr 2019 06:50 PM
Last Updated : 18 Apr 2019 06:50 PM
சிம்புவின் நண்பராகவும், நடிகராகவும் உள்ள மஹத் தனது நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஷ்ராவைத் திருமணம் செய்யவுள்ளார்.
அஜித்துடன் 'மங்காத்தா', விஜய்யுடன் 'ஜில்லா', சிம்புவுடன் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' உள்ளிட்ட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் மஹத். சிம்புவுக்கு நெருங்கிய நண்பராகவும் வலம் வருபவர்.
இவருடைய பெயர் 'பிக் பாஸ் சீஸன் 2' நிகழ்ச்சியின் மூலமே பெரும் பிரபலமானது. அந்நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்துடன் நட்பு, அடிக்கடி கோபப்படுவது என்று சர்ச்சையிலும் சிக்கினார். அவரது நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஷ்ராவுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே இருவரும் காதலர்களாக வலம் வந்தனர். மாடலிங் துறையில் இருப்பது மட்டுமன்றி, சொந்தமாக வியாபார நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் பிராச்சி மிஷ்ரா.
இருவருக்கும் நடந்த திருமண நிச்சயத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விரைவில் திருமணத் தேதி அறிவிக்கப்படவுள்ளது. திருமணத்துக்கு திரையுலகினர் அனைவரையும் அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
தற்போது 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மஹத். இதில் அவர் தீவிரமான சிம்பு ரசிகராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT