Published : 23 Apr 2019 09:06 AM
Last Updated : 23 Apr 2019 09:06 AM

திரை விமர்சனம்: மெஹந்தி சர்க்கஸ்

கொடைக்கானல் அருகே பூம் பாறை கிராமத்தில் கேசட் மற்றும் ‘மைக்-செட்’ கடை வைத்திருக்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்). மகாராஷ் டிராவில் இருந்து அங்கே வந்து முகா மிடும் சர்க்கஸ் குழுவைச் சேர்ந்த மெஹந்திக்கும் (ஸ்வேதா திரிபாதி) ஜீவாவுக்கும் இடையே காதல் மலர் கிறது. பிரச்சினை மெஹந்தி அப்பா (சன்னி சார்லஸ்) வடிவில் வருகிறது. சர்க்கஸில் நடக்கும் சாகசத்தைப் போல் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் தன் மகள் மீது 9 கத்திகளை வீச வேண் டும். அதில் ஒன்றுகூட அவள் மீது படக் கூடாது. அப்படி சாகசம் புரிந்தால் என் பெண்ணைக் கொடுக்கிறேன் என்கிறார்.

இதனிடையே சாதி வேறுபாடு பார்க் கும் தந்தை ராஜாங்கத்துக்கு (மாரி முத்து) மகனின் காதல் தெரிய வருகிறது. நாயகனின் தந்தை, நாயகியின் தந்தை என ஒரே மாதிரியான இரு பிரச்சினைகள் சூழ, ஜீவா - மெஹந்தியின் காதல் என்ன ஆனது? ராஜாங்கத்தின் சாதி வெறி தணிந்ததா? மெஹந்தியின் அப்பா என்ன முடிவெடுத்தார் போன்ற கேள்வி களுக்கு பதில் சொல்கிறது திரைக் கதை.

வெகு அபூர்வமாக எடுத்தாளப்பட்ட சர்க்கஸ் பின்னணி, பனி போர்த்திய கொடைக்கானல் ஆகியவற்றைக் கள மாகக் கொண்டு 1992-ல் ஆரம்பிக்கும் காதல் கதை 2010-ல் முடிவதாக ராஜூ முருகனும் இயக்குநர் சரவண ராஜேந் திரனும் கதை பின்னியிருக்கும் விதம் அலாதியானது. அன்பின் அடர்த்தியை காதலின் ஆழத்தை மிக நேர்மை யாகப் பதிவு செய்திருக்கும் அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரனுக்கு வாழ்த்துகள்.

இளையராஜாவின் பல திரையிசைப் பாடல்கள், கதை நடக்கும் 1992-ன் காலகட்டத்தை நம் கண்முன் கொண்டு வர உதவி இருக்கின்றன.

சிறு சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த வராக இருக்கும் கதாநாயகி பங்கேற் கும் மரண விளையாட்டை, காதலை வளர்க்கவும் திரைக்கதையில் முக்கியத் திருப்பங்களை உருவாக்கவும் தேவைக் குச் சற்று அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

காதல் காட்சிகள் என்ற பெயரால் தேவையற்ற திணிப்புகள் எதுவும் செய்யாமல், அளவாக, இயல்பாக விட் டிருப்பதையும் பாராட்டலாம். அதே போல் பல சர்க்கஸ் சாகசக் காட்சிகளைக் காட்ட வாய்ப்பிருந்தும் அவற்றைத் தவிர்த்து, காதலின் பயணத்தைக் கால ஓட்டத்தில் அடுத்தடுத்த கட்டங் களை நோக்கி விரைவாக நகர்த்திச் செல்லும் திரைக்கதையை இயக்குநர் தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக் கிறார்.

ஜீவா - மெஹந்தி காதலைக் காவி யத் தன்மையுடன் சித்தரிக்க முயலும் இயக்குநருக்கு ஷான் ரோல்டனின் இசையும் சதிஷ்குமாரின் கலை இயக்க மும் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் பெரிய அளவில் கைகொடுத்திருக் கின்றன.

இளையராஜாவின் பாடல்களால் தன் வாழ்க்கையையும் பிறரது வாழ்க்கையையும் அழகாக்கிவிடும் ஆற்றல்கொண்ட கதாநாயகன் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரங்கராஜை அறிமுக நடிகர் என்று நம்ப முடியவில்லை. இந்திப் படமான மாசானில் கவனிக்க வைத்த ஸ்வேதா திரிபாதி தமிழில் மெஹந்தியாக அசத்தல் நடிப்பை வழங்கியுள்ளார்.

ஒரே மாதிரியான கேரக்டர்களில் பார்த்துப் பழக்கப்பட்ட வேல.ராம மூர்த்திக்கு மாறுபட்ட கதாபாத்திரம். அதை மிகச் சிறப்பாகச் செய்துள் ளார். பாதிரியாராகவும், அன்பின் அதிபதி யாகவும் அவர் பூம்பாறை கிராமத்து இளைஞர்களை ஆசிர்வதிக்கும் விதம் பிரமாதம்.

ஜாதியின் போதையில் தள்ளாடும் ராஜாங்கமாக நாயகனின் அப்பா கதா பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் மாரிமுத்து. இதுபோன்ற பல கதாபாத்திரங்களில் அவரை ஏற்கெனவே பார்த்துவிட்டதால் சிறந்த நடிப்பைத் தந்தபோதும் பெரிய அழுத்தத்தை அவரது கதாபாத்திரம் ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.

ஜாதவ்-ஆக வரும் மகாராஷ்டிர நடிகரான அன்கூர் விகால் உள் ளிட்ட மற்ற துணைக் கதாபாத்திரங் களுக்கான நட்சத்திரத் தேர்வு சோடை போகவில்லை.

காதலியைத் தேடிப் புறப்படும் ஜீவா, மெஹந்தியின் சர்க்கஸ் குழுவில் பணிபுரிந்த ‘குள்ளன்’ கலைஞரைச் சந்திக்கிறான். “காதலோட வலி என்னன்னு எனக்கும் தெரியும் ஜீவா. இதயம் உங்களுக்கு என்ன சைஸோ.. அதே அளவுதான் எங்களுக்கும்” எனச் சொல்லுமிடம் தொடங்கி கதாசிரியர் ராஜூமுருகனின் வசனமும் படம் முழுவதும் கவனிக்க வைக்கிறது.

பாதிரியார் கதாபாத்திரத்தை முன் வைத்து, சில மதம் சார்ந்த கருத்துகளை, காட்சி அமைப்பிலும் வசனமாகவும் கையாளப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக் கலாம்.

இவைபோன்ற சில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் காதல், அதன் காலங்கடந்த பயணம், சாதீயம், துரோகம் ஆகியவற்றை சிறப்பாகச் சித்தரித்து மனத்தில் கூடாரம் போட்டு அமர்ந்து கொள்கிறது இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x