Last Updated : 18 Apr, 2019 01:06 PM

 

Published : 18 Apr 2019 01:06 PM
Last Updated : 18 Apr 2019 01:06 PM

காத்துட்டு இருக்கேன்; நல்லது நடக்கும்: வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கை

காத்துட்டு இருக்கேன்; நல்லது நடக்கும் என்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 18) தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து வருகிறார்கள். இதில் தமிழ் திரையுலக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தன்னுடைய வாக்கினை கோடம்பாக்கத்தில் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசும் போது, "முதன்முறையாக வாக்களித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஏனென்றால் அது பெருமைக்குரிய விஷயம்.

18 வருடம் நம் வீட்டில் முடிவெடுக்கவே, நம் வீட்டில் கேட்பாளர்களா என்று தெரியாது. ஆனால், நாட்டை யார் ஆளணும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். நானும் வாக்களித்துவிட்டேன். அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்துட்டு இருக்கேன். நல்லது நடக்கும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வரும் வாட்ஸ்-அப் தகவல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். அதற்கு என்ன வழி என்று சொல்லத் தெரியவில்லை. அது இல்லாமல் இருந்தால் சந்தோஷம்.

இந்த வருஷம் அதிகப்படியான வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறேன். ஏனென்றால், மக்களிடையே அரசியல் பற்றி விழிப்புணர்வு அதிமாகியுள்ளது. ஒருவருக்கொருவர் அரசியலைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக அரசியல் பற்றி அறிவை வளர்த்திருக்கிறார்கள். நான் அந்த விஷயத்தை அதிகமாகப் பாராட்டுகிறேன்" என்று பேசினார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x