Last Updated : 12 Apr, 2019 06:52 PM

 

Published : 12 Apr 2019 06:52 PM
Last Updated : 12 Apr 2019 06:52 PM

தர்பார் போஸ்டர் காப்பியா? - புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்த டிசைனர்

'தர்பார்' போஸ்டர் காப்பி என்று சர்ச்சையானதற்கு, தன் ஃபேஸ்புக் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் டிசைனர் வின்சிராஜ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

'தர்பார்' என்று பெயரிடப்பட்டும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனை பலரும் ஹாலிவுட் படமான 'Killing Gunther' போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இரண்டு போஸ்டர்களை ஒப்பிட்டு செய்திகளையும் வெளியிட்டனர்.

இதற்கு எவ்வித விளக்கமும் கொடுக்காமல், 'தர்பார்' போஸ்டர் வடிவமைப்பாளரான வின்சிராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலமே, 'தர்பார்' போஸ்டரை எப்படி வடிவமைத்தார் என்பது தெளிவாக தெரிகிறது.

'மூன்று முகம்' கண்ணாடி போட்ட ரஜினியுடன் சேர்த்து, அபாயம் லோகோ வடிவமைப்புடன் இணைந்து இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார் என்பது வின்சிராஜ் வெளியிட்ட புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார்.

'அட்டகத்தி', 'மரகதநாணயம்','கனா' உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் வடிவமைத்தவர் வின்சிராஜ். பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களுக்கு வின்சிராஜ் போஸ்டர் வடிவமைத்திருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x