Last Updated : 19 Apr, 2019 02:31 PM

 

Published : 19 Apr 2019 02:31 PM
Last Updated : 19 Apr 2019 02:31 PM

ஜெயம் ரவியின் 25-வது படம்: லட்சுமண் இயக்குகிறார்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 25-வது படத்தை, லட்சுமண் இயக்கவுள்ளார். இதனை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார்.

'ஜெயம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. அதனைத் தொடர்ந்து 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'பேராண்மை', 'ரோமியோ ஜூலியட்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது உருவாகி வரும் 'கோமாளி' ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 24-வது படமாகும். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25-வது படத்தின் இயக்குநர் யார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின.

அண்ணன் ராஜா இயக்கத்தில் 'தனி ஒருவன் 2' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்தை தனது 25-வது படமாக அறிவித்துள்ளார் ஜெயம் ரவி. இதனைத் தொடர்ந்தே 'தனி ஒருவன் 2' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சுமண் - ஜெயம் ரவி கூட்டணி ஏற்கெனவே 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. இக்கூட்டணி தற்போது இணையும் 3-வது படமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். இப்படத்தை 'அடங்க மறு' படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார். இவர் ஜெயம் ரவியின் மாமியார் ஆவார்.

ஜெயம் ரவி தனது 25-வது படத்தை அறிவித்திருப்பதற்கு, அவருடைய திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x