Published : 29 Apr 2019 08:35 AM
Last Updated : 29 Apr 2019 08:35 AM

நடிப்புதான் சந்தோஷம் தருகிறது: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நேர்காணல்

‘‘நல்ல படங்களிலும் இருக்கணும், பெரிய படங்களிலும் இருக்கணும். அப்படி இருந்தால் மட்டுமே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தில் போய்ச்சேர முடியும்’’ என்று உற்சாகத்தோடு பேசத் தொடங்குகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தெலுங்கில் ‘ஜெர்ஸி’ படத்தின் மாபெரும் வெற்றி, தமிழில் அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருப்பது என மிகுந்த குதூகலம் அவரது முகத்தில் தாண்டவமாடுகிறது. தற்போது அருள்நிதியுடன் ‘கே 13’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்துக்காக சென்னை வந்த ஷ்ரத்தாவுடன் ஒரு நேர்காணல்..

ஜெர்ஸி’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?

பொதுவாகவே, ஒருமுறை அம்மா கேரக்டரில் நடித்தால், அதன் பிறகு நிரந்தரமாக அம்மா கேரக்டர் என்று நம் திரையுலகில் முத்திரை குத்திவிடுவது வழக்கம். நானும் அதை எண்ணி முதலில் தயங்கியது உண்மைதான். அதேசமயம், ‘ஜெர்ஸி’ கதையில் ஒரு பெரிய பிளாஷ்பேக் பகுதி இருக்கிறது. அதில் இளம்பெண்ணாகவும் வரு கிறேன். தவிர, அம்மா, கல்லூரி மாணவி, காதலி என்று எந்த பாத்திரத்தில் நடித் தாலும், அந்த கதாபாத்திரத்தின் தன்மை யைத்தான் பார்க்க வேண்டும். மாறாக, அந்த பாத்திரத்தின் வயதை பார்க்கக் கூடாது. அந்த கதாபாத்திரத்தை எப்படி திரையில் கொண்டு வருகிறோம் என்பதே முக்கியம்.

இந்தியில் நீங்கள் அறிமுகமான ‘மிலன் டாக்கீஸ்’ படம் தோல்வி அடைந்ததில் வருத்தம் உண்டா?

கண்டிப்பாக! நல்ல படம் ஓட வேண் டும். ஒரு ரசிகையாக கதையைக் கேட்டு, ஈர்க்கப்பட்ட பிறகு ஒப்புக்கொள் கிறோம். அந்த படம் வெற்றி பெற்றால் தானே எல்லோரும் பார்ப்பார்கள். நாடகத் தில் நடிக்க மேடை ஏறுகிறோம். பார்வை யாளர்களே யாரும் இல்லை என்றால் நம் மனநிலை எப்படியிருக்கும். நம் படம் ஓடவில்லை என்றாலும் அது போலத்தான் இருக்கும். இந்த வருத்தம் ஒரு பக்கம் என்றாலும், அந்த படத்தின் நினைவுகள் ஒருபோதும் நம் நெஞ்சை விட்டு நீங்காது. அந்த விஷயத்தில் சந்தோஷப்படுகிறேன். இப்போதும் நிறைய இந்தி கதைகள் கேட்கிறேன். எதுவும் ஈர்க்கவில்லை.

தற்போது அருள்நிதியுடன் நடித்து வரும் ‘கே 13’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து..

அதில், மலர்விழி என்ற எழுத் தாளராக நடிக்கிறேன். அருள்நிதி உதவி இயக்குநராக நடிக்கிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் எந்த எல்லை வரையும் போகலாம் என்பது இந்த இரு கதாபாத்திரங்கள் இடை யிலான ஒற்றுமை. இருவரும் ஒரு கட்டத் தில் சந்திக்கிறோம். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.

மேடை நாடகத்தில் இருந்து திரைக்கு வந்துவிட்டீர்கள். இப்போதும் மேடை நாடகங்கள் பார்க்கிறீர்களா?

என் நண்பர்களின் நாடகங்களை பார்க்கிறேன். அதை பார்க்கும்போதே, துக்கம் தொண்டையை அடைக்கும். நாடகம் முடிஞ்சதும், நண்பர்களை கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘ரொம்ப மிஸ் பண் றேன்’ என்று கண்ணீர் விடுவேன். ‘நீ பெரிய ஹீரோயின் ஆகிட்ட. உனக்கு என்ன கவலை’ என்று கிண்டல் செய் வார்கள். நாடக மேடை மீது நிற்பதே ஒரு கவுரவம்தான். ஒவ்வொரு முறையும் பயந்துகொண்டே ஏறுவேன். விரைவில் நாடகங்களும் பண்ணுவேன்.

சட்டப் படிப்பு படித்தவர் நீங்கள். அதில் மேற்படிப்பு படிக்கும் எண்ணம் உள்ளதா?

இல்லை. இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான். இதில் ரொம்பவே சந் தோஷமா இருக்கேன். சட்டம் படித்த 5 ஆண்டுகளில்தான், நாடகத்தின் மீதான ஈர்ப்பை தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையில் நடிப்பு மட்டுமே எனக்கு அதிகப்படியான சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

அஜீத்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?

இந்தியில் டாப்ஸி பண்ணிய கதாபாத் திரத்துக்கு உங்களை டெஸ்ட் ஷுட் பண்ணனும் என்று டிசம்பரில் அழைத் தார்கள். அப்போது ஒரு சின்ன காட்சி நடித்துக் காட்டச் சொன்னார்கள். ஜன வரியில் போட்டோ ஷூட் பண்ண அழைத்து, பெரிய காட்சி ஒன்றை நடித் துக் காட்டச் சொன்னார்கள். உணர்ச்சி மயமான காட்சியில் எப்படி நடிக்கிறேன் என்று பார்த்தார்கள். ஒரு டேக் முடிந்தவுடன், ‘இந்த காட்சியில் உங்கள் நடிப்பு, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக் கணும்’ என்று இயக்குநர் வினோத் சொன்னார். உடனே, இன்னொரு டேக் போகலாம் என்று கூறி நடித்துக் காட்டினேன். அனைவருக்கும் ரொம்ப திருப்தி. ரொம்ப குஷியாயிட்டேன். இப்படத்தில் நான் இருப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பாக என் திரையுலக வாழ்க்கையில் ஒரு மாற்றத்துக்கான படம்.

வக்கீல், நாடக நடிகை, இப்போது முன்னணி நடிகை. இது எப்படி சாத்தியமானது?

இதற்கு என் குடும்பத்தினர்தான் முக்கிய காரணம். ‘என்ன வேண்டு மானாலும் பண்ணு, அதை சிறப்பாக பண்ணு’ என்றுதான் அவர்கள் எப் போதும் சொல்வார்கள். என் வளர்ச்சி அவர்களுக்கு பெருமைதான்!

அஜீத் படத்தில் நான் இருப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பாக என் திரையுலக வாழ்க்கையில் ஒரு மாற்றத்துக்கான படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x