Published : 20 Mar 2019 10:23 AM
Last Updated : 20 Mar 2019 10:23 AM
லட்சுமி, ‘மா' குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சர்ஜுன், ‘எச்சரிக்கை - இது மனிதர்கள் நட மாடும் இடம்' மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். தனது 2-வது படமான ‘ஐரா'வில் நயன்தாராவை நாயகியாக்கி இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் மும்முரமாக இருந்த வரிடம் பேசியதில் இருந்து...
‘ஐரா' கதையைக் கேட்டவுடன் நயன்தாரா என்ன சொன்னார்? கிராமத்துப் பெண் கேரக்டரில் நடிக்க நயன்தாரா எப்படி சம்மதித்தார்?
படத்தின் கதையை சுருக்கமாக 45 நிமி டத்துக்கு நயன்தாராவிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால், ஆரம்பத்தில் சற்று யோசிக்கத் தான் செய்தார். இன்னும் கொஞ்சம் தனக்கு டைம் வேண்டும் என்றார். பின்னர் அவருடைய படத்தை போட்டோஷாப்பில் கிராமத்து பெண் போல மாற்றி, அவ ருக்கு அனுப்பி வைத்தேன். அதன் பிறகு ஒரு மேக் கப் டெஸ்ட் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கிராமத்துப் பெண் போன்று மேக்கப் போட்டோம். அதைப் பார்த்தபிறகுதான் அவருக்கு நம்பிக்கை வந்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
அவரை இயக்கிய அனுபவம் எப்படி?
படப்பிடிப்பு தொடங்கிய முதல் 2 நாட் களுக்கு பதற்றம் அதிகமாக இருந்தது. ஏனென்றால், என் 2-வது படத்திலேயே பெரிய ஸ்டாருடன் பணிபுரிவது தான் காரணம். அனைவருக்குமே அந்த பதற்றம் இருக்கத்தான் செய்யும். ஒரு சில நாட்களில் தன் இயல் பான பேச்சின் மூலம் ஒட்டு மொத்த படக்குழுவினரையும் இயல்பான மனநிலைக்கு அவர் கொண்டுவந்து விட்டார்.
‘மாயா', ‘டோரா' போன்று இதுவும் திகில் படமா? ‘ஐரா' தலைப்புக்கு என்ன அர்த்தம்?
திகில் படம் என்று சொல்வதை விட ‘சூப் பர் நேச்சுரல்’ படம் என்று சொல்ல லாம். பவானி என்ற பெண்ணைச் சுற்றி நடக்கும் கதை. ‘மாயா'விலும், ‘டோரா' விலும் சொல்லப்படாத ஒரு விஷயம் இந்த ‘ஐரா’வில் இருக்கிறது. ஐராவதம் என்பதன் சுருக்கம்தான் ‘ஐரா'. ஐராவதம் என்றால் யானை. பொதுவாக யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதாலும் இந்த கதையோடு தொடர்பு இருப்பதாலும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தோம். என் உதவி இயக்குநர் ஒருவர்தான் இந்தப் பெயரை வைத்தார். இக்கதை முழுக்க முழுக்க நயன்தாராவை மனதில் வைத்தே எழுதப்பட்டது.
உதவி இயக்குநர்களாக இருந்து படம் இயக்க வருபவர்கள், குறும்படங்கள் எடுத்து படம் இயக்க வருபவர்கள். வித்தியாசம் என்ன?
நான் இரண்டிலுமே பணிபுரிந்திருக் கிறேன். குறும்படம் இயக்கும்போது மிகவும் சின்ன பட்ஜெட்டில் ஒரு 4 அல்லது 5 நாட்களில் எடுத்துவிடலாம். ஆனால் பெரிய படம் என்று வரும்போது நேரத்தை கணக்கிடுவது சிரமமாக இருக் கும். அதேபோல குறும்படம் எடுக்கும்போது நாமே தயாரிப்பாளராக இருந்திருப்போம். அதனால் பணம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் இங்கே பணத்தை முதலீடு செய்பவர் வேறொருவர். எனவே, நாம் அதற்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சிரமங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு வருபவர்களுக்கு இருக்காது.
‘லட்சுமி', ‘மா' போன்று ‘ஐரா' படத்திலும் ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருக்கிறதா?
சர்ச்சைக்குரிய கருத்து எதுவும் இருக்காது. ஆனால் இதில் ஓர் ஆழமான விஷயம் உள்ளது. தினமும் நம்மைச் சுற்றி, நம் ஊரில், நாட்டில், ஏன் உலகம் முழுவதும் நடக்கக் கூடிய ஒரு விஷயத்தைப் பற்றித் தான் விரிவாக அழகாகப் பேசியிருக் கிறோம்.
இதுவும் வழக்கமான பேய்ப்படமா அல்லது பெண்ணியம் பேசும் படமா?
வழக்கமான பழிவாங்கும் பேய்ப் படம்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தப் பேயை எல்லோருக் கும் பிடிக்கும். பேய்ப் படம் என்றாலே இப்படித்தான் என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும். ஆனால் அதற்குள்ளேயும் ஒரு கதையை எப்படி சொல்லியிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். பொறுத் திருந்து பாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT