Last Updated : 27 Mar, 2019 01:03 PM

 

Published : 27 Mar 2019 01:03 PM
Last Updated : 27 Mar 2019 01:03 PM

சாய் பல்லவியுடன் திருமணமா? - இயக்குநர் விஜய் தரப்பு மறுப்பு

சாய் பல்லவியைத் திருமணம் செய்யவுள்ளார் என்று வெளியான செய்திக்கு, இயக்குநர் விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இயக்குநர் விஜய் - அமலா பால் இருவருக்கும் திருமணமாகி, சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் பட இயக்கத்தில் மும்முரமாகப் பணியாற்றி வருகிறார்.

'வாட்ச்மேன்', 'தேவி 2' ஆகிய படங்களை முடித்துவிட்டு, தற்போது ஜெயலலிதா பயோபிக்கை இயக்கவுள்ளார். இதில், ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இயக்குநர் விஜய், நடிகை சாய் பல்லவியை இரண்டாவதாகத் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின. பலரும் இச்செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். இயக்குநர் விஜய் - சாய் பல்லவி இருவருமே 'தியா' படத்தில் இணைந்து பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பாக இயக்குநர் விஜய் தரப்பில் விசாரித்தபோது, “இச்செய்தியில் உண்மையில்லை. இருவருமே நல்ல நண்பர்களாக மட்டுமே இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்கள்.

விரைவில் 'வாட்ச்மேன்' மற்றும் 'தேவி 2' பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில், இயக்குநர் விஜய் தனது திருமண வதந்தி தொடர்பாக விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x