Published : 04 Mar 2019 11:45 AM
Last Updated : 04 Mar 2019 11:45 AM
அரசியலில் அனுபவமில்லை; கற்றுக்கொண்டு வருவேன் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வரலட்சுமி சரத்குமார் உறுதிப்பட தெரிவித்தார்.
'வெல்வெட் நகரம்', 'கன்னிராசி', 'நீயா 2', 'காட்டேரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு மார்ச் 5-ம் தேதி பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு சென்னையில் பள்ளி மாணவகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் இயந்திரங்களைக் கொடுக்கும் விழாவில் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் வரலட்சுமி சரத்குமார் பேசியதாவது:
பெண்கள் தங்களுடைய பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும். அதே போல், அபிநந்தன் நாடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி. அபிநந்தனை சிறைபிடித்தவுடன் நாட்டு மக்கள் சமூகவலைத்தளத்தில் கொந்தளித்து அவரும் திரும்பினார். அதே போன்றதொரு ஒரு கொந்தளிப்பை விவசாயிகள் விஷயத்திலும் காட்டினால் இன்னும் மகிழ்வேன். சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும்
அரசியலுக்கு வருவது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்போது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு அரசியலில் போதிய அனுபவமில்லை. ஆகையால், சரியான சமயத்தில் முழுமையாக அரசியலைக் கற்றுக் கொண்டு வருவேன். அரசியல் என்பது கெட்டவார்த்தை அல்ல. தற்போதுள்ள சூழலில் கண்டிப்பாக ஒரு விரல் புரட்சி தேவை. என் அப்பா சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT