Last Updated : 17 Feb, 2019 01:17 PM

 

Published : 17 Feb 2019 01:17 PM
Last Updated : 17 Feb 2019 01:17 PM

‘நடிக்கிறேன், பையனுக்கு ஃபீஸ் கட்டுறியா?’னு நாஞ்சில் சம்பத் கேட்டாரு’: கலங்கிய ஆர்.ஜே.பாலாஜி

‘நடிக்கிறேன், என் பையனுக்கு ஃபீஸ் கட்டுறியா?’ன்னு நாஞ்சில் சம்பத் கேட்டாரு’ என்று எல்.கே.ஜி. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கியபடி தெரிவித்தார் ஆர்.ஜே.பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது:

இரண்டு பேருக்கு ரொம்பவே நன்றி சொல்லணும்னு தோணுது. ராம்குமார் சார். அவர், நடிகர் பிரபு சாரின் அண்ணன். மிகப்பெரிய பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனா, பந்தா எதுவும் இல்லாம பழகினார். எனக்குத் தெரிந்து அறுவடைநாள், ஷங்கரின் ‘ஐ’ படங்களில்தான் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டேன்.

உடனே அவர், ‘உனக்காக நடிக்கிறேன்’னு சொல்லி ஒத்துக்கிட்டார். பிரமாதமாவும் நடிச்சுக் கொடுத்தார். தவிர, ராம்குமார் சார், நல்லா இங்கிலீஷ் பேசுவார். இதுலயும் நிறைய இங்கிலீஷ் டயலாக்கெல்லாம் பேசியிருக்கார்.

அடுத்து நன்றிக்குரிய மனிதர், நாஞ்சில் சம்பத் சார். இந்தப் படத்துல அவர் நடிச்சா நல்லாருக்கும்னு அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். சென்னை பட்டினப்பாக்கத்துல, ஹவுஸிங்போர்டுல வீடு. 600 சதுர அடி வீடு அது.

அந்த வீட்டைப் பாக்கும்போதே ஒருமாதிரியா இருந்துச்சு. அவர்கிட்ட கதையெல்லாம் சொல்லிட்டு, ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன்.

ஒருநிமிஷம் யோசிச்சார். என்னைப் பாத்தார். ‘சரி, நடிக்கிறேன். ‘என் பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுறியா?’ன்னு கேட்டாரு. 40 வருஷமா அரசியல்ல இருக்கார். பல அரசியல்வாதிகள், காலேஜே கட்டியிருக்காங்க. ஆனா நாஞ்சில் சம்பத், பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டமுடியலை. ரொம்பவே வேதனையா இருந்துச்சு.

படத்துல அவருக்கு நெகட்டீவ் அரசியல்வாதி ரோல்தான். ஆனா இவரோட குணம் தெரிய ஆரம்பிச்சப்போ, இவரோட நல்ல மனசு புரிஞ்சப்ப, அவரோட கேரக்டரை ரீ ஒர்க் பண்ணினோம். அவரோட குணத்தை வைச்சே கேரக்டர் பண்ணினோம்.

அடுத்ததா சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கிறார் நாஞ்சில் சம்பத் சார். தொடர்ந்து நிறைய படங்கள் நடிச்சு, நிறைய சம்பாதிக்கணும்.

இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x