Published : 20 Feb 2019 08:38 AM
Last Updated : 20 Feb 2019 08:38 AM
‘‘அரசியல் பின்னணியில் ஒரு படம் எடுக்கணும்னு முடிவானதும் மூத்த அரசியல்வாதிகள் தொடங்கி குறிப்பாக, ஒரே தொகுதியில் 5 தேர்தல்களில் வெற்றிபெற்ற மனிதர் வரை சந்தித்தோம். அந்த அனுபவங்கள் எங்களது திரைக்கதை ஆக்கத்துக்கு பெரிய அளவில் பக்கபலமாக இருந்தது. அதிலும், நாஞ்சில் சம்பத், ஐசரி கணேஷ், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட அரசியல் அனுபவம் உள்ளவர்களும் படத்துக்கு ஒவ்வொரு விதத்தில் பங்களிப்பு செய்ததால் இது ஒரு பொறுப்பான அரசியல் படமாக மாறியது’’ என்கிறார் ஆர்ஜே பாலாஜி.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி விறுவிறுப்பாகியுள்ள நிலையில், ‘எல்கேஜி’ (லால்குடி கருப்பையா காந்தி) என்ற பெயரில் உருவாகியிருக்கும் முழு நீள அரசியல் படம் வழியே கதாநாயகனாக களமிறங்குகிறார் ஆர்ஜே பாலாஜி. அவருடன் ஒரு நேர்காணல்..
அரசியல் குறித்த பொறுப்பான படம் என்று பேசத் தொடங்குகிறீர்கள். ஆனால், படத்தின் போஸ்டர், உருவான விதம் ஆகியவற்றை பார்க்கும்போது ‘தமிழ்படம்’ போல ஸ்பூஃப் வகை படம்போல தெரிகிறதே?
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வருவதற்கு முன்பு அப்படத்தின் விளம்பர போஸ்டரில் ‘அலைபாயுதே’, ‘உயிரே’ படங் களின் புகைப்படங்களை வைத்து விளம்பரம் செய்தாங்க. அதுபோல, நாங்க செய்ததுகூட மக்களை திரும்பி பார்க்க வைப்பதற்கான முயற் சிகள்தான். அதேநேரம், இங்கு இருக்கும் அரசி யல்வாதிகளை கிண்டல், கேலி செய்வதற்கான களமாக மட்டுமே இது இருக்காது. படத்தில் அழுத்தமான செய்தியோடு, அதற்கான தீர்வை யும் பிரதிபலித்திருக்கோம். முக்கியமாக, இது விளையாட்டுத்தனமான அரசியல் படம் அல்ல. இன்றைய அரசியல்வாதிகள் பார்த் தால், நிச்சயம் படம் முடியும்போது எழுந்து நின்னு கைதட்டுவாங்க.
‘நாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே எதற்கு அரசியல்?’ என்று யாரும் கேட்க வில்லையா?
நாம் எந்த ஒரு விஷயம் செய்தாலும், அதில் நமது பலம் என்ன என்பதைவிட, பலவீனம் என்ன என்பதைத்தான் நன்கு தெரிஞ்சுக்கணும். ஹீரோ என்றால் ஜிம்முக்கு போய் உடம்பை ‘சிக்ஸ் பேக்’காக மாற்றுவது, வெளிநாட்டு பின்னணியில் 2 டூயட் பாடல்கள்.. என்றெல் லாம் யோசிப்பது சிரமம் அல்ல. ஆனால், இந்த பாலாஜியை எந்த அளவுக்கு மக்களுக்கு பிடிக்கும்? எப்படி இருந்தால் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நன்றாகவே உணர்ந் திருக்கிறேன். அதைத்தான் படம் பேசும்.
கதாநாயகனின் நண்பன், காமெடி கதா பாத்திரம் என நீங்கள் வளர்ந்துவரும் சூழலில் திடீரென ஹீரோவானதற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டா?
கடந்த ஆறேழு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கேன். ஒரு ஆர்ஜேவாக, கிரிக்கெட் வர்ணனையாளராக, திரைப்பட நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக, பிடித்தமான சமூக ஆர்வலனாக கிடைத்த திருப்தி, ஏனோ நடிகனானபோது முழுமை யாக கிடைக்கவில்லை. முக்கிய இயக்குநர் கள், நடிகர்களின் படங்களில் நடித்தபோதும், என் கதாபாத்திரங்கள் ஏனோ எனக்கு திருப்தி யானதாக அமையவில்லை. இதேபோல தொடர்ச்சியாக என்னைப் பார்த்து மக்கள் சோர்வடைந்துவிடக் கூடாது. அதற்கு முன்பு ஏதேனும் செய்யணும் என்று தோன்றியது. அதனால்தான் நாமே யோசித்து, எழுதி, திரைக்கதை அமைக்கும் ஒரு படத்தில் இருந்து இத்தகைய பயணத்தை தொடங்கலாம் என்று நினைத்தேன்.
இவ்வளவு யோசித்த நீங்களே படத் தின் இயக்குநராகவும் இருந்திருக் கலாமே?
நான் எழுதி அமெரிக்காவில் நடத்திய ஒரு ஷோ பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த அனுபவம், நம்பிக்கைதான் என் நண்பர்களுடன் இணைந்து இந்த படத்துக்கும் கதை, திரைக்கதை உருவாக்க வைத்தது. தற்போது ‘எல்கேஜி’ தொடர்பாக வெளியே வர்ற ஒரு போஸ்டரைக்கூட 7 மணி நேரத்துக்கு மேல அமர்ந்து செப்பனிடுகிறோம். இது போல எல்லாவற்றிலும் என் கவனம் இருந்தாலும் இக் கதையை நல்லபடியாக நகர்த் திக்கொண்டு போக திறமையான, அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவைப் பட்டார். பிரபுதேவா, ரவிவர்மன் போன்ற படைப்பாளிகளிடம் பணி புரிந்த பிரபு அதற்கு பொருத்தமாக இருப்பார்னு முடிவு செய்தோம். எதிர்பார்த்தபடியே, அவரும் படத்தை பக்காவாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
ஹீரோ பாலாஜிக்கு ஆர்ஜே என்கிற அணிகலன் இனி தேவைப்படுமா?
கிரிக்கெட்டர், தொகுப்பாளர் என்று பல பணிகள் செய்திருந்தாலும், என்னை அடையாளப்படுத்தியது ஆர்ஜே பணிதான். அதை ஒருபோதும் விடமாட்டேன். ‘ஆண் டுக்கு 10 படம் நடிக்கணும், நிறைய சம்பாதிக்கணும்’ என்று நான் இங்கு வரவில்லை. செய்யும் வேலையை ரொம்ப நாட்களுக்கு நிதானமாக, சிறப்பாக செய்தால் போதும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT