Last Updated : 04 Feb, 2019 11:43 AM

 

Published : 04 Feb 2019 11:43 AM
Last Updated : 04 Feb 2019 11:43 AM

’கமலுக்கு ஸ்பெஷலா பாட்டு போடுவார் ராஜா சார்!’ - இளையராஜா 75 விழாவில் ரஜினி

என் படங்களுக்கும் எத்தனையோ பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார் ராஜா சார். ஆனாலும் கமலுக்கு ஸ்பெஷலா பாட்டுபோடுவார் என்று இளையராஜா 75 விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சியும் அவருக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இரண்டு நாள் நடைபெற்ற விழாவின் நிறைவு நாளில், ரஜினி, கமல், ஷங்கர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது ரஜினி பேசியதாவது:

என்னுடைய பெரும்பான்மையான படங்களுக்கு இளையராஜா சார்தான் இசையமைத்திருக்கிறார். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தந்திருக்கிறார். உண்மையிலேயே ராஜா சார் இசைமேதை. அவருக்கு நடக்கும் இந்தப் பாராட்டு விழாவில் நானும் நிற்கிறேன் எனப் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய படங்களில், எத்தனையோ பாடல்களை ஹிட் பாடல்களாகக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கமல் படங்கள் என்றால் ஸ்பெஷலாக இசையமைப்பார் ராஜா சார்.

என்னுடைய பாடல்களில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ மாதிரி ஒரு பாடல் இதுவரை அமையவில்லை. அதேபோல், ‘ஊரைத் தெரிஞ்சிகிட்டேன்’ பாடல் அவ்வளவு பிரபலமாகி, படத்தின் வெற்றிக்கும் உதவியாக அமைந்தது.

இவ்வாறு ரஜினி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x