Last Updated : 10 Sep, 2014 01:38 PM

 

Published : 10 Sep 2014 01:38 PM
Last Updated : 10 Sep 2014 01:38 PM

அஜித் 55 அப்டேட்ஸ்: நவம்பரில் இசை; டிசம்பரில் ரிலீஸ்

கெளதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் இசையை நவம்பரில் வெளியிடவும், படத்தை டிசம்பரில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

பர்ஸ்ட் லுக், படத்தின் பெயர் உள்ளிட்ட எதுவுமே இதுவரை வெளியாகவில்லை. முழுமையாக படப்பிடிப்பை முடிந்து விடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது படக்குழு.

இந்நிலையில், மொத்த படப்பிடிப்பையும் முடித்து டிசம்பரில் படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். நவம்பர் மாதம் இசையையும், அதற்கு சில நாட்களுக்கு முன்பு படத்தின் பெயரை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயரை படத் தலைப்பாக வைக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x