Published : 08 Jan 2019 09:44 AM
Last Updated : 08 Jan 2019 09:44 AM
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவே கம்’ வரிசையில் அஜித் - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்த வாரம் ரிலீஸாகிறது. அந்த உற்சாகத்தில் இருக்கும் இயக்குநர் சிவாவுடன் ஒரு நேர்காணல்..
அஜித் படம் என்றாலே திரு விழாதான். ‘விஸ்வாசம்’ டிரெய் லர் பார்க்கும்போது, இது கிராமத்து திருவிழாபோல தெரிகிறதே?
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்கப்போகிறோம். அதுவே ரசிகர்களுக்குப் பெரிய திரு விழாதான். கொடுவிலார்பட்டி என்ற கிராமத்து மண்ணின் மைந்தர்களைப் பற்றிய கதை. கிராமத்தில் தொடங்கி நகரம் வரை தொடர்கிற கதை. உண்மையும், பாசமும், நேசமும், எகத்தாளமும் கொண்ட மக்கள் வாழும் பின்னணியில் கதை நடப்பதால், திரைக்கதை எழுதும்போதே திருவிழா தோரணை வந்துவிட்டது. எடுக்கும்போது அது இன்னும் அதிகமாகிவிட்டது. படம் முழுக்க திருவிழா களையைக் கொண்டுவர கலை இயக்குநரின் பங்களிப்பு முக்கிய காரணம்.
அஜித்தின் இரு தோற்றங்களில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?
இரட்டை வேடம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரே அஜித் தான். இரண்டு கால கட்டங்களில் வரும் அஜித்தின் வெவ்வேறு தோற்றங்கள் அவை. அஜித் ஏற்றுள்ள ‘துரை’ கதா பாத்திரத்தை இரு பரிமாணங் களில் வடிவமைத்துள்ளேன். அலப்பறையா, மாஸா ஒரு கெட்டப்பில் இருப்பார். அதில் ரொம்ப பாசமாக, வீரமாகவும் இருப்பார். அது ஒரு காலகட்டம். இன்னொரு காலகட்டத்தில் அமைதியா, எதார்த்தமா, மாஸா இருப்பார். இரண்டு கெட்டப்புக்கும் மாஸ் பாட்டும் இருக்கு. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த மக்களிடமே பேசி, பழகி, மதுரை வட்டார வழக்கை கற்றுக் கொண்டு, இதுவரை இல்லாத புதிய உடல்மொழியை வெளிப் படுத்தி பக்கா கிராமத்து நபராக நடித்திருக்கிறார் அஜித்.
கிராமியப் பின்னணியில் அஜித்தை வைத்து நீங்களே படம் செய்திருக்கிறீர்கள். ஆனால் இதில் கார்ப்பரேட் எதிர்ப்பு, நில உரிமை, வளச் சுரண்டல் என அஜித், அரசியல் கதையில் நடித் திருப்பதுபோல தெரிகிறதே?
டிரெய்லர் பார்த்தவர்களுக்கு அப்படித்தான் தெரியும். அவ்வளவு அற்புதமாக அதை எடிட் செய்த ரூபனுக்கே இந்த பெருமை கிடைக்க வேண்டும். இது அரசியல் படம் அல்ல. ஆழமான, குடும்பப் பாங்கான, உணர்வுகள் நிறைந்த படம். கிராமத்தில் நடப்பதால் அதற்குரிய காட்சி அமைப்புகளும் படத்தில் உண்டு. அஜித் விவசாயியாக வருகிறார். இது ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான பொழுதுபோக்கு கமர்ஷியல் திரைப்படம்.
நயன்தாராவின் தலையிலும் புல்லுக்கட்டை ஏற்றிவிட்டீர்கள். ‘நிரஞ்சனா’ என்ற அவரது கதாபாத்திரத்தின் பெயர் நவீனமாக இருக்கிறதே?
அதுபற்றி பேசினால் கதை யையே சொல்லவேண்டி இருக் கும். அஜித்போலவே, நயன் தாராவும் கிராமம், நகரம் இரண்டிலும் வருகிறார். இவருக் கும் இருவித பரிமாணம், இரு வித தோற்றம். ஆனால் ஒரே கதாபாத்திரம்தான்.
உங்கள் படங்களில் ஆக்சன் காட்சிகளை தெறிக்கவிடுவீர்களே. இதில்?
‘விஸ்வாசம்’ படத்தில் மொத் தம் 4 ஆக்சன் பகுதிகள். நான்குமே கதையுடன் ஒட்டியே இருக்கும். அஜித் ஏன் அடிச்சார், எதுக்கு அடிச்சார் என்கிற காரணம் அழுத்தம் திருத்தமாக ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கும். இதுவரை சினிமாக்களில் நாம் கண்டிப்பாக பார்த்திராத பைக் சண்டைக்காட்சி ஒன்றும் இருக்கிறது. சண்டைக் காட்சி இயக்குநராக திலிப் சுப்பராயன் முதல்முறையாக எங்கள் அணியில் இணைந்திருக்கிறார். அவரைப்போல எங்கள் அணிக்கு புதிதாக வந்திருக்கும் இமானும் மிரட்டி யிருக்கிறார்.
அஜித் சிவா கூட்டணியின் பிணைப் புக்கு என்ன காரணம்?
எங்கள் இடையே பரஸ்பரம் அளவுகடந்த நம்பிக்கை, மரியாதை இருக்கிறது. எங்கள் பிணைப்பானது வெற்றி - தோல்விகளால் ஏற்பட்டது அல்ல. இருவருக்குமான தொழில் பக்தி, உண்மையான புரிதலால் ஏற்பட்டது.
ரஜினியின் ‘பேட்ட’ ரிலீ ஸாகும் நாளன்றே ‘விஸ்வாசம்’ வெளிவருவது பற்றி..
இது எதிர்பாராமல் அமைந்தது. மே 7-ம் தேதி படம் தொடங்கியபோதே, ‘2019 ஜனவரி 10-ம் தேதி படம் ரிலீஸ்’ என்று தயாரிப்பாளர் தியாகராஜன் கூறிவிட்டார். அதற்கேற்ப படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொண்டோம். படத்தை முடித்துக் கொடுப்பது மட்டுமே என் போன்ற இயக்குநரின் வேலை. வெளியீடு தயாரிப்பாளர் எடுக்கும் முடிவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT