Published : 20 Jan 2019 06:12 PM
Last Updated : 20 Jan 2019 06:12 PM
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜனவரி 21) சென்னையில் துவங்கவுள்ளது.
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று(ஜனவரி 20) நடைபெற்றது.
சென்னையில் நாளை (ஜனவரி 21) முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர். இதில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கவுள்ளனர். நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால், இதில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது. விரைவில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 'தளபதி 63' என்று அழைத்து வருகிறது படக்குழு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணிபுரிந்து வருகிறார்.
இந்தாண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நினைவுக்கூறத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT