Published : 25 Jan 2019 09:24 PM
Last Updated : 25 Jan 2019 09:24 PM
அரவிந்த் ஸ்ரீதர் - செல்லப்பிராணிகள் மீது அன்பு செலுத்தும் கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பரத் - சிம்பா பரத்துக்கு 30-வது படம். பாத்திரம் உணர்ந்து உறுத்தாமல் நடித்திருக்கிறார். சிம்பாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது ஸ்கோர் செய்கிறார். கதையிலும் அவர் கவனம் செலுத்தினால் நல்லது.
பானு ஸ்ரீ மெஹ்ரா - நடிக்க ஸ்கோப் இல்லை. குணச்சித்திரக் கதாபாத்திரத்துக்கான பங்களிப்புதான். ஆனால், அதில் பானு எந்தக் குறையும் வைக்கவில்லை.
பிரேம்ஜி அமரன் - படம் முழுக்க வருகிறார். பல இடங்களில் காமெடி என்ற பெயரில் 'கடி'க்கிறார். பிரேம்ஜியின் நகைச்சுவை எடுபடவில்லை.
ஸ்வாதி தீக்ஷித் - பத்தோடு பதினொன்றாகவே உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.
ரமணா- எந்த சுவாரஸ்யமும் இல்லை.
படத்தின் ப்ளஸ் - சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு, விஷால் சந்திரசேகரின் இசை, அச்சு விஜயனின் எடிட்டிங்.
மைனஸ் - திரைக்கதை
சோதனை - கேங் லீடர்களுக்குள் நடக்கும் கலந்துரையாடல் காட்சியைப் 'போலச் செய்'யும் பிரேம்ஜி பேசும் வாதம்.
சவால்: கதை எதை நோக்கிச் செல்கிறது என்பதை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாதது.
லாஜிக் கேள்விகள்: பரத்தின் தாத்தா ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்? பானு ஸ்ரீ மெஹ்ரா விவாகரத்துக்குக் காரணம் என்ன? பரத் ஏன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்? அதிலிருந்து ஏன் வெளியே வரவில்லை? நார்மலாகவே நடந்துகொள்ளாத அவர் எப்படி அலுவலகத்தில் தொடர்ந்து வேலை பார்க்க முடிகிறது? தனிமைதான் பிரச்சினையா?
ரசிகர்கள் - பரிசோதனை முயற்சிதான். ஆனால், ரசிகர்கள் எலிகள் அல்லவே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT