Published : 09 Sep 2014 10:55 AM
Last Updated : 09 Sep 2014 10:55 AM
சமூகம் சார்ந்த தனது பார்வையை பொதுவெளியில் பகிரங்கமாகப் பதிவு செய்வதில் குறிப்பிடத்தக்கவரான நடிகை குஷ்பு, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள், ஆன்லைன் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலியல் தொழில் வழக்கில் கைதான கன்னட நடிகை விவகாரத்தில் தனது கொந்தளிப்பை கொட்டி ட்வீட்டிருக்கிறார் குஷ்பு.
அவரது அந்த மூன்று பதிவுகள்:
பதிவு 1: பாலியல் தொழில் வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்படும்போது அவரது முகம், அடையாளம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் ஏன் மறைக்கப்படுகிறது? அந்த ஆணுக்கும் இந்த குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே?
பதிவு 2: பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவை பெற்றதற்காக அந்த ஆண்மகனுக்கும் அதே இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
பதிவு 3: ஒருவகையில் அந்த ஆணுக்கு கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிலிருந்து பாலின்பம் பெறுகிறார் அந்த ஆண்.
நடிகை குஷ்புவின் இந்த மூன்று பதிவுகளும், இரண்டு பேர் சேர்ந்து செய்யும் ஒரு குற்றத்தில் ஒருவர் மட்டும் குற்றவாளியாகவும் மற்றொருவர் சட்டத்தினால் மட்டுமல்ல சமூகத்தாலும்கூட தண்டிக்கப்படாதது ஏன் என்ற வலுவான கேள்வியை முன்வைத்துள்ளது.
பாலியல் தொழிலாளியை அணுகும் ஆண், குறைந்தபட்சம் சமூகத்தின் அருவருப்பைக் கூட பெறுவதில்லை என்பதே அவரது ஆதங்கமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT