Last Updated : 26 Dec, 2018 07:50 PM

 

Published : 26 Dec 2018 07:50 PM
Last Updated : 26 Dec 2018 07:50 PM

சில காலம் த்ரிஷாவைக் காதலித்தேன்: ராணா ஒப்புதல்

இந்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, சில காலம் த்ரிஷாவைக் காதலித்தேன் என்று தெரிவித்தார் நடிகர் ராணா

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி, ராணா, பிரபாஸ் மூவருமே உலக அளவில் தெரிந்த நட்சத்திரங்களாக உருவாகியுள்ளனர். மூவருமே தங்களது அடுத்தெடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

பிரபாஸ் மற்றும் ராணா இருவருக்குமே திருமணம் ஆகவில்லை. இதில் பிரபாஸ் அனுஷ்காவைக் காதலித்து வருவதாக தகவல் வெளியான வண்ணமுள்ளன. ஆனால், இதனை இருவருமே மறுத்துள்ளனர். அதே போல், ராணாவும் த்ரிஷாவும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அப்போது அவர் எனது தோழி என்று மறுத்தார் ராணா.

இந்நிலையில், கரண் ஜோஹர் நடத்தும் 'காபி விஃத் கரண்' நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ் மற்றும் ராணா ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். அப்போது பல கேள்விகளுக்கு மூவரும் உற்சாகமாகப் பதிலளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ராணாவிடம் த்ரிஷாவுடனான காதல் குறித்து கேள்வி எழுப்பினார் கரண் ஜோஹர். அதற்கு “10 ஆண்டுகளுக்கு மேலமாக த்ரிஷா நல்ல தோழியாக இருந்தார். இடையே சில காலம் அவரைக் காதலித்தும் வந்தேன். பின்னர் சரிப்பட்டு வராத காரணத்தால் காதலை முறித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார். இப்பதிலுக்கு பிரபாஸ் கிண்டலாக, "இருவரையும் நான் சேர்த்து வைப்பேன்" என்று தெரிவித்தார்.

பிரபாஸிடம் அனுஷ்காவுடனான காதல் குறித்து கேட்டதற்கு, “அதில் உண்மையில்லை” என்று தெரிவித்தார். ராணா - பிரபாஸ் இருவரில் ராணா தான் முதலில் திருமணம் செய்து கொள்வார் என இயக்குநர் ராஜமெளலி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x