Published : 01 Dec 2018 10:30 AM
Last Updated : 01 Dec 2018 10:30 AM
பிரபல இயக்குநரும், ஒளிப்பதி வாளருமான ராபர்ட் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.
தமிழ் திரையுலகில் குறிப் பிடத்தகுந்த இரட்டை இயக்குநர் களில் முக்கியமானவர்கள் ராபர்ட் - ராஜசேகர்.
‘ஒருதலை ராகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராபர்ட், அதன் பிறகு இயக்குநர் ராஜசேகருடன் இணைந்து ‘பாலைவனச் சோலை’, ‘கல்யாண காலம்’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘பறவைகள் பலவிதம்’, ‘மனசுக் குள் மத்தாப்பூ’, ‘புதிய சரித்திரம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன், இணைந்து இயக்கவும் செய்தார்.
திருமணம் செய்துகொள்ளாத ராபர்ட், சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு, கொளத்தூரில் இன்று காலை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment