Published : 08 Dec 2018 11:33 AM
Last Updated : 08 Dec 2018 11:33 AM
செல்வராகவன் - யுவன் மீண்டும் இணைந்துள்ளதால் 'என்.ஜி.கே' படத்தின் இசையுரிமை பெரும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளது சோனி நிறுவனம்.
செல்வராவகன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணிக்கு இசைப்பிரியர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உண்டு. 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இடையே இருவருக்கு மனஸ்தாபங்கள் ஏற்பட்டுப் பிரிந்தனர். தற்போது மனஸ்தாபங்களை மறந்து மீண்டும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்காக இணைந்தனர். இந்நிலையில் செல்வராகவன் - யுவன் கூட்டணி 'என்.ஜி.கே' படத்திகும் தொடர்கிறது. இதனால் இப்படத்தின் இசையுரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக பெரும் விலை கொடுத்து சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இடையே செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், 'என்.ஜி.கே' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தடைப்பட்டு இருந்தது. தற்போது கே.வி.ஆனந்த் படத்திலிருந்து சூர்யா திரும்பியுள்ளதால், 'என்.ஜி.கே' படப்பிடிப்பு மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT