Last Updated : 21 Dec, 2018 09:05 PM

 

Published : 21 Dec 2018 09:05 PM
Last Updated : 21 Dec 2018 09:05 PM

சீதக்காதி படம் குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்துகள்

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள 'சீதக்காதி' படம் குறித்து திரையுலக பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மெளலி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சீதக்காதி'. விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள 25-வது படம் இதுவாகும். ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகமெங்கும் ட்ரைடெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

'சீதக்காதி' படம் குறித்து பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துகளின் தொகுப்பு:

பா.இரஞ்சித்: சீதக்காதி படத்துக்காக நாம் அனைவரும் பாலாஜிதரணீதரனைப் பாராட்ட வேண்டும். ஒரு எழுத்தாளராக, இயக்குநராக அவருக்கு இந்தப் படம் நேர்மையைச் சேர்த்துள்ளது.

கார்த்திக் நரேன்: சீதக்காதி கலையின் கொண்டாட்டம். பாலாஜி தரணீதரனின் இதயபூர்வமான அஞ்சலி.  அனைவரின் நடிப்பும் எழுந்து நின்று கரகோஷம் செய்ய வைக்கும் நடிப்பாகும்.  சினிமாவுக்கே உரிய பல கணங்கள் பிரமாதமாக வந்துள்ளன, ஆனால் ஒரு காட்சி என்னை பேச்சற்றவனாக திகைக்க வைத்தது. ஒரு சிறப்பு வாய்ந்த படம்.

அமலா பால்: நீங்கள் ஒரு மிடாஸ் விஜய் சேதுபதி, நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகிறது!  உங்கள் கதைத்தேர்வில் என்ன மாதிரியான அலை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள். உங்கள் எதிர்காலப் படங்களும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்களது 25வது படத்துக்கு வாழ்த்துக்கள்.

பார்வதி நாயர்: புதுயுக காவியம் சீதாக்காதி! என்ன ஒரு உயிரோட்டம், என்ன மாதிரியான உணர்ச்சிகள், நாடக்க்கலைஞர்களை கொண்டாடும் காலம் இதுவே.  தலைமுறைகளின் கொண்டாடப்படாத உண்மையான நாயகர்கள் அவர்கள்.  விஜய் சேதுபதியினால் செய்ய முடியாத ஏதாவது ஒன்று இருக்கிறதா?  அவர் ‘அய்யா’, இயக்குநர் பாலாஜி உங்களை சிரிக்க வைக்க்கிறார், அழவைக்கிறார், இத்தகைய படத்துக்கான அவா அதிகரிக்கிறது.

ரம்யா நம்பீசன்: சீதக்காதி குழுவினருக்கு வாழ்த்துக்கள். பாலாஜி தரணீதரனின் நேர்மையான முயற்சியை அனுபவிக்க தயாராகுங்கள்!! சொல்ல வார்த்தைகள் இல்லை.  மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மேஜிக், கோவிந்த் வசந்தா நம் ஆன்மாவை நிறைக்கிறார். தியேட்டர் கலைஞர்களுக்கு மிகப்பெரிய வணக்கங்கள்

ஷிவதா நாயர்: கலைஞர் இறப்பதில்லை, அவரது கலை அவரை உயிரோடு வைத்திருக்கும், உண்மையைச் சொல்லி, படைப்புப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சீதக்காதியைப் பார்த்து மகிழ்ந்தேன்.

கதிர்: பாலாஜி தரணீதரனுக்கு வாழ்த்துக்கள், சீதக்காதி ஒரு உணர்வூட்டும் படம். 25வது படத்துக்கு விஜய் சேதுபதிக்கு என் வாழ்த்துக்கள்.  நீங்கல் எப்பவும் உத்வேகம் அளிக்கிறீர்கள். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

மித்ரன்: சீதக்காதி ஒரு உருவகம். நடிப்புக் கலைக்கான சிறந்த அர்ப்பணிப்பு, தமிழ்சினினாவின் முதல் மேஜிக்கல் ரியலிச முயற்சி. விஜய்சேதுபதியின் அட்டகாசமான நடிப்புடன் மொத்தக் குழுவினருடன் பாலாஜி தரணீதரன் தனிச்சிறப்பான ஒரு திரைப்படத்தை நமக்கு அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x