Last Updated : 07 Aug, 2018 08:51 PM

 

Published : 07 Aug 2018 08:51 PM
Last Updated : 07 Aug 2018 08:51 PM

மெரினா கடற்கரையில் இடம் தருமளவுக்கு தகுதி படைத்தவர் கருணாநிதி: தமிழக அரசுக்கு விஷால் வேண்டுகோள்

மெரினா கடற்கரையில் இடம் தருமளவுக்கு தகுதி படைத்தவர் கருணாநிதி என்று தமிழக அரசுக்கு விஷால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு விஷால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கருணாநிதியின் மறைவு குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாக்டர் கலைஞர் கருணாநிதி ஈடு இணையற்ற ஒரு தலைவர். அரசியல் மற்றும் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்கை யாராலும் சமன் செய்ய முடியாது. அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் இருக்கும் அவரது தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது பிரபலமான வசனங்களும், திரைக்கதையும் இன்றும் பிரபலமானவை. அவரது இழப்பு திரைத்துறையை வருத்தமடையச் செய்துள்ளது. கலைஞர் ஐயா ஆற்றிய பங்குக்கும், ஒரு அரசியல் கட்சிக்கு 50 ஆண்டுகள் தலைவராக இருந்ததற்கும் கண்டிப்பாக மெரினா கடற்கரையில் இடம் தருமளவுக்கு தகுதி படைத்தவர். எனவே, கலைஞர் ஐயாவின் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் தர, சாத்தியப்படும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x