Last Updated : 24 Jul, 2018 09:54 AM

 

Published : 24 Jul 2018 09:54 AM
Last Updated : 24 Jul 2018 09:54 AM

நல்ல கலைஞனுக்கு ஓய்வு கிடையாது: மனம் திறக்கிறார் ‘ஓம்’ நாயகன் பாரதிராஜா

‘பதினாறு வயதினிலே’ இயக்கியபோது எப்படி இருந்தாரோ, அதே உற்சாகம், இளமையுடன் இருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. போராட்டம், கைது, வழக்கு ஆகியவற்றுக்கு இடையில், தான் இயக்கி, நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் புரொமோஷன் வேலைகளையும் கவனித்து வருகிறார். பட அனுபவம் குறித்து நம்மிடையே மனம் திறக்கிறார் பாரதிராஜா..

‘அன்னக்கொடி’ படத்துக்குப் பிறகு என் அடுத்த படைப்பு இது. இதை தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட் டது. என்னைப் பொறுத்தவரை, சமகால இயக்குநர் களோடு போராடி ஓடிக்கொண்டே இருந்தால்தான் உயிரோடு இருக்கிறேன் என்று அர்த்தம். நல்ல கலை ஞனுக்கு ஓய்வு என்பது வரக்கூடாது. ஓய்வெடுத்தான் என்றால் மறைந்துவிட்டான் என்று அர்த்தம்.

‘ஓம்’ என்றவுடன் இது ஏதோ ஆன்மிகம் போலி ருக்கு.. என நினைக்க வேண்டாம். ஆங்கிலத்தில் Old Man என்பதை சேர்த்துதான் OM என வைத்திருக்கிறேன்.

ஒரு கிராமத்து எழுத்தாளர் லண்டனில் உள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். அப்போது, தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பெண்ணை அந்த எழுத்தாளர் காப்பாற்றுகிறார். ‘‘உனக்கு 10 நாள் அவகாசம் தருகிறேன். என்னோடு பயணம் செய். அதற்குப் பிறகும் இந்த உலகம் உனக்குப் பிடிக்காவிட்டால் நானே உன்னை கொன்றுவிடுகிறேன்’ என்று அந்த பெண்ணிடம் கூறுகிறார். 10 நாளில் என்ன நடக்கிறது, அந்தப் பெண் என்ன ஆனார் என்பதுதான் கதை.

இந்த படத்தில் ‘நக்சத்ரா’ என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறேன். எனது நெருங்கிய நண்பரின் மகள். படத்தில் ஜோமல்லூரி, மவுனிகா மற்றும் என்னைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்.

லண்டன், இஸ்தான்புல், இமாச்சலப் பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இப்படத்துக்கு எடிட்டிங்கில் அடுத்தடுத்து பல வடிவங்கள் கொடுத்தேன். நீங்கள் பார்க்க இருப்பது 18-வது வடிவம்.

’ஓம்’ படத்துக்குப் பிறகு ‘செல்லாக்காசு’, ‘செலினா’ என இன்னும் 2 படங்கள் முடித்து வைத்திருக்கிறேன்.

சில படங்களில் என்னை நடிக்கவும் கேட்டிருக்கிறார்கள். 2 கதைகள் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். நடிக்கத்தான் வந்தேன். ஆனால், படம் இயக்குவதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

தமிழ் திரையுலகில் தற்போது 12 இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவங்களை அண்ணாந்து பார்க்கிறேன். அவர்களைத் தாண்டி, எட்டிப் பிடித்து பார்க்கவேண்டிய தொலைவில் இயக்குநர் ராம் இருக்கிறான். அதுதான் உண்மை. இங்கு எல்லாருமே இயக்குநர் இமயங்கள், புதுமை இயக்குநர்கள்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x