Published : 19 Jul 2018 04:00 PM
Last Updated : 19 Jul 2018 04:00 PM
’நரகாசூரன்’ படத்தின் தயாரிப்பு பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகியிருக்கிறார். தற்போது படமும் தணிக்கையாகி ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நரகாசூரன்’. இப்படத்துக்கு பைனான்ஸ் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து, கெளதம் வாசுதேவ் மேனன் - கார்த்திக் நரேன் ஆகிய இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனால் படத்துக்கு டப்பிங் பணிகள் முடிவடையாமல், தணிக்கை செய்யப்படாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, படத்தை தணிக்கை செய்திருக்கிறார்கள். அதில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இதனை இயக்குநர் கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டருடன் அறிவித்திருக்கிறார். அப்போஸ்டரில் தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்த கெளதம் வாசுதேவ் மேனனின் பெயர் இடம்பெறவில்லை.
மேலும், “’நரகாசூரன்’ படத்துக்கு ‘யு//ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தணிக்கை அதிகாரிகள் எதையுமே கட் செய்யச் சொல்லவில்லை. 1:50 நிமிடப் படமாக உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். விரைவில் ட்ரெய்லர் வெளியாகும்” என்று இயக்குநர் கார்த்திக் நரேன் குறிப்பிட்டு இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT