Published : 25 Mar 2025 10:56 AM
Last Updated : 25 Mar 2025 10:56 AM
ஓடிடியில் மார்ச் 28-ம் தேதி ‘அகத்தியா’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி வெளியான படம் ‘அகத்தியா’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியை தழுவியது.
தற்போது இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில், பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்திய படம் ‘அகத்தியா’ என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வருடங்கள் தயாரிப்பில் இருந்து, பெரும் பொருட்செலவில் தயாரான படம் ‘அகத்தியா’. பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம். வேல்ஸ் நிறுவனம் மற்றும் வார்ம் இந்தியா நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்தினை பி.வி.ஆர் நிறுவனம் வெளியிட்டது.
An angel and a devil are on their way to meet you all this March 28th!
Aghathiyaa streaming from 28th march on Sun NXT
[Aghathiyaa, Jiiva, Arjun Sarja, Raashii Khanna, Edward Sonnenblick, Matylda, Radha Ravi, Yogi Babu, Rohini, Poornima Bhagyaraj, Abhirami,… pic.twitter.com/uvAV52vT14— SUN NXT (@sunnxt) March 24, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment