Published : 23 Mar 2025 09:10 AM
Last Updated : 23 Mar 2025 09:10 AM

வாழ்க்கையில் இருந்து கதையை எடுத்தால் படம் வெற்றி பெறும்: சொல்கிறார் கே.பாக்யராஜ்

சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், ’இஎம்ஐ- மாதத் தவணை’. காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இதை, சபரி புரொடக் ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்துள்ளார். நாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நாத் பிச்சை இசையமைத்துள்ளார். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது, “நான், என் முதல் படத்துக்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன். ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். பின் நம் வாழ்க்கையில் இருந்து கதையை எடுப்போம் என கதையை உருவாக்கினேன். நம் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் படம் ஜெயிக்கும். ‘இஎம்ஐ’ எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமெடியோடு கதையைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார். இயக்குநர்கள் அரவிந்தராஜ், ஆர்.வி.உதயகுமார், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x