Published : 19 Mar 2025 03:11 PM
Last Updated : 19 Mar 2025 03:11 PM
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்டு வருகிறார்கள்.
‘காதலன்’ தொடங்கி ‘கேம் சேஞ்சர்’ வரை பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஆனால், இவருடைய இயக்கத்தில் வெளியான கடைசி 2 படங்களான ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகியவை பெரும் தோல்வியை தழுவின.
இதனிடையே, தற்போது இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். ‘இந்தியன் 2’ விழாவில் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார் அர்ஜித். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், அவர் நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளை தொடங்கவுள்ளார்கள். இதற்காக பல முன்னணி இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுள்ளார்கள். விரைவில் இயக்குநர் யார் என்பது தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment