Published : 17 Mar 2025 10:23 PM
Last Updated : 17 Mar 2025 10:23 PM
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடைந்ததுள்ளது. இறுதிகட்ட பணிகளை ஒரே கட்டமாக முடித்து ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ‘கூலி’ படத்தின் பிரத்யேக பிடிஎஸ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. அதில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
It's a super wrap for #Coolie @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/ulcecQKII1
— Sun Pictures (@sunpictures) March 17, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment